- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி, கோலி பெயரை காலி செய்யப் போகும் ரோஹித்.. படைக்க போகும் புது சரித்திரம்..

தோனி, கோலி பெயரை காலி செய்யப் போகும் ரோஹித்.. படைக்க போகும் புது சரித்திரம்..

- Advertisement 1-

இந்திய அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தி வந்த முன்னாள் கேப்டன் தோனி, மூன்று ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, டெஸ்ட்டில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடிக்கவும் மிக கடினமாக உழைத்து வழி நடத்தி இருந்தார். அவர் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அடுத்தடுத்து கேப்டன் பதவியை துறக்க, அவருக்கு பின்னர் ரோஹித் சர்மா இந்திய அணியை தற்போது வழி நடத்தி வருகிறார்.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு மிகச்சிறந்த கேப்டனாக இருந்து வரும் ரோஹித் சர்மா, நம்பர் 1 அணியாக வளரவும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இப்படி பல சிறப்புகள் வாய்ந்த கேப்டனாக ரோஹித் விளங்கினாலும் இதுவரை அவரது தலைமையில் ஐசிசி கோப்பைகளை இந்திய அணியால் வெல்ல முடியாமல் போகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்திருந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஒரு நாள் உலக கோப்பையின் இறுதிப் போட்டி என இரண்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்து நூலிழையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் தவற விட்டிருந்தது.

ரோஹித் கேப்டன்சியில் குறையாக இருக்கும் இந்த உலகக் கோப்பையை நிச்சயம் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 கோப்பை உலக கோப்பைத் தொடர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதே போல, டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஆட உள்ளனர்.

- Advertisement 2-

சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமை தாங்கவுள்ள நிலையில் தோனியின் முக்கியமான சாதனை ஒன்றையும் அவர் இந்த தொடரில் முறியடிப்பதற்கு அசத்தலான வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. முதல் டி 20 உலக கோப்பையியை தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்று பட்டையைக் கிளப்பி இருந்தது.

தோனியின் தலைமையில் இந்திய அணி 72 டி20 போட்டிகள் ஆடி 41 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு இந்திய கேப்டனாக டி20 போட்டியில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள கேப்டன் என்ற பெருமையும் தோனியின் பக்கம் தான். அப்படி இருக்கையில், 51 டி 20 போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ள ரோஹித் சர்மா, அதில் 39 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தோனியின் சாதனையை முறியடித்து அதிக டி20 போட்டிகளை வென்ற சர்வதேச கேப்டன் என்ற சிறப்பை இயான் மோர்கன், பாபர் அசாம், அஸ்கர் ஆப்கன், மசாபா ஆகியோருடனும் ரோஹித் பகிர்ந்து கொள்வார்..

அது மட்டுமில்லாமல், ரோஹித் சர்மா 44 ரன்கள் அடித்தால் சர்வதேச டி 20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்து தன் பெயரையும் பதிக்க முடியும். இதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதால் ஒரே தொடரில் தோனி மற்றும் கோலியை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பும் ரோஹித்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்