- Advertisement 3-
Homeவிளையாட்டு555 சிக்ஸ்... 7 சதம்... சச்சின், கிறிஸ் கெயில் ரெக்கார்ட் எல்லாம் கிளோஸ்.. ஒரே போட்டியில்...

555 சிக்ஸ்… 7 சதம்… சச்சின், கிறிஸ் கெயில் ரெக்கார்ட் எல்லாம் கிளோஸ்.. ஒரே போட்டியில் பல உலக சாதனைகள் படைத்த ரோகித் சர்மா

- Advertisement-

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அக்டோபர் 11-ஆம் தேதி இன்று டெல்லி மைதானத்தில் துவங்கிய நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் 9-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவுகள் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது.

ஆப்கானிஸ்தானின் சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷாகிதி 80 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 62 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது அதிரடியான துவக்கத்தை பெற்றதோடு மட்டுமின்றி முதல் விக்கெட்டுக்கு 18.4 ஓவர்களில் 156 ரன்களை சேர்த்தது.

- Advertisements -

முதல் விக்கெட்டாக 47 ரன்களுடன் இஷான் கிஷன் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் சதம் அடித்து 131 ரன்களில் வெளியேறினார்.

அவர் அடித்த இந்த சதம் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை அவர் இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயிலை முந்திய அவர் 555 சிக்ஸர்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement-

அதோடு இந்திய அணி சார்பாக உலகக் கோப்பைகளில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் 6 சதத்தை தாண்டிய அவர் இன்று தனது ஏழாவது சதத்தை உலககோப்பை தொடரில் பூர்த்தி செய்தார். மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் வெகுவிரைவாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் இன்று படைத்தார்.

இன்றைய போட்டியில் 63 பந்துகளின் சதம் அடித்த ரோகித் சர்மா உலககோப்பை போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டும் இன்றி உலகக் கோப்பைகளில் ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்