- Advertisement 3-
Homeவிளையாட்டு16 வருஷ பயணம்.. பெருமையா இருக்கு.. ரோஹித் ஷர்மா தொட்ட உயரம்.. எமோஷனல் ஆன கேப்டன்

16 வருஷ பயணம்.. பெருமையா இருக்கு.. ரோஹித் ஷர்மா தொட்ட உயரம்.. எமோஷனல் ஆன கேப்டன்

- Advertisement 1-

உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் அதன் பின்னர் தொடர்ந்து வெற்றிகளை மட்டும் தான் குவித்து வருகிறது. ஒரு சில தொடர்கள் சமனில் முடிந்திருந்தாலும் இந்திய அணி ஒரு முறை கூட தொடரை இழக்கவில்லை. ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளை வெற்றிப் பாதையில் கடந்த இந்திய அணி, தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றி உள்ளது.

ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஆபகானிஸ்தான் அணி சிறந்த இலக்கை நிர்ணயித்த சமயத்திலும் அதனை மிக எளிதாக எட்டிப்பிடித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 173 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் அதிரடியாக ரன் சேர்த்தனர்.

ஜெய்ஸ்வால் மற்றும் துபே ஆகியோர் முறையே 68 மற்றும் 63 ரன்கள் எடுக்க, இந்திய அணி 16 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது. ரோஹித் சர்மா மீண்டும் ஒரு முறை டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும் மற்ற இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெருக்கடியில் இருந்தும் இந்திய அணியை மீட்டு தொடரை கைப்பற்றவும் உதவி செய்தனர்.

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல் ரவுண்டர்கள் இல்லாத குறையை மிக கச்சிதமாக போக்கி வருகிறார் ஷிவம் துபே. இரண்டு போட்டிகளில் சேர்த்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவர், இரண்டிலுமே அரைசதம் கடந்து கடைசி வரை களத்தில் நின்றிருந்தார். இதனால், ஐபிஎல் மற்றும் டி 20 உலக கோப்பைத் தொடரிலும் அவரது பங்கு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

மேலும், 4 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார். இன்று ஆடிய போட்டியுடன் மொத்தம் 150 டி 20 சர்வதேச போட்டிகள் ஆடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றிருந்தார். இது பற்றியும் பேசிய ரோஹித் ஷர்மா, “இது ஒரு மிகச் சிறந்த உணர்வு. 2007 ஆண்டு முதல் இது ஒரு நீண்ட பயணமாக இருந்து வருகிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்து வருகிறோம். இதனால் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வரும் போது அதை நினைத்து பெருமையாகவும் உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலுமே அனைத்து தவறுகளையும் திருத்திக் கொண்டு சிறப்பாக ஆடி உள்ளோம்.

துபே மற்றும் ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆடி வருகின்றனர். ஜெய்ஸ்வால் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தன்னால் என்ன முடியுமோ அதை அப்படியே கச்சிதமாக செய்து வரும் ஜெய்ஸ்வால், சிறந்த ஷாட்களை தேர்ந்தெடுத்து அதை அமைப்பதற்கான திறமையும் அவரிடம் உள்ளது. மிகவும் பவர்ஃபுல் பேட்ஸ்மேனாக இருக்கும் ஷிவம் துபே, சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி பேட்டிங்கை ஆடுகிறார். அவருக்கு என்ன வேலையோ அதனை இரண்டு போட்டிகளிலும் செய்து மிக முக்கியமான இன்னிங்ஸை அணிக்காக அளித்துள்ளார்” என ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்