உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் துவண்டு போன ரோகித் சர்மா மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, சிராஜ் உள்ளிட்ட வீரர்களும் கண்ணீர் சிந்தினர்.
இந்த நிலையில் இந்திய அணியை தோல்வியை ரசிகர்களின் கவனத்தில் இருந்து திருப்ப பிசிசிஐ தரப்பில், உடனடியாக இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்படாத நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய டி20 அணியில் இனி சீனியர் வீரர்கள் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இனி டி20 அணியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்காள் இடம்பெற போவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் இனி இந்திய அணி டி20 அணி இளம் வீரர்களை கொண்ட அணியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எப்படி தோனி 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, கும்ப்ளே இல்லாமல் விளையாடினாரோ, அதேபோல் இளம் வீரர்களை கொண்ட அணியாகவே உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்படியாகவே ரோகித் சர்மா தானாகவே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து மற்ற சீனியர் வீரர்களான விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோரும் ரோகித் சர்மாவை போல் முடிவெடுப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.