- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி ஃபைனல்ஸ்ல பாத்துப்பாரு.. அந்த 2 பேர் தான் எல்லாத்துக்கும் காரணம்.. அடுத்த மேட்ச்ல பாருங்க...

கோலி ஃபைனல்ஸ்ல பாத்துப்பாரு.. அந்த 2 பேர் தான் எல்லாத்துக்கும் காரணம்.. அடுத்த மேட்ச்ல பாருங்க – ரோஹித் ஷர்மா

- Advertisement 1-

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டி 20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்த போது கேப்டனாக ரோஹித் கண்ணீர் வடித்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அதே இங்கிலாந்து அணியை அதே டி20 உலக கோப்பையின் அரையிறுதியில் தோற்கடித்து ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் கேப்டன் ரோஹித். மழை அவ்வப்போது குறுக்கிட்டு வந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் பிட்ச்சும் சிறப்பாக இருந்தது.

அப்படி ஒரு சூழலில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 171 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் எடுக்க இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்டி இருந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தாலும் அதனை போட்டி முழுக்க தொடர முடியவில்லை.

அக்சர் படேல், குல்தீப் யாதவ் என இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டையைக் கிளப்ப, இங்கிலாந்து அணியால் 103 ரன்கள் மட்டும் தான் சேர்க்க முடிந்தது. இதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய அணி, நிச்சயம் 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை சொந்தமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆண்டுகள் கழித்து டி 20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது பற்றி பேசி இருந்த ரோஹித் ஷர்மா, “இந்த வெற்றியை பெற்றது மனநிறைவாக இருக்கிறது. ஒரு அணியாக கடினமாக உழைத்ததுடன் அனைவரும் நல்ல பங்களிப்பை அளித்துள்ளனர். சூழலுக்கு ஏற்ற வகையில் எங்களை உட்படுத்திக் கொண்டு ஆடியது சவாலாக இருந்தது. இதுவரையும் எங்களுடைய வெற்றி பயணமும் அதுதான். பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் பிட்ச்சுக்கு ஏற்ப தங்களை தயார் செய்தாலே அனைத்தும் நினைத்தது போல நடந்து விடும்.

- Advertisement 2-

ஒரு கட்டத்தில் 140 முதல் 150 ரன்கள் வரை சேர்ப்போம் என நினைத்தோம். ஆனால், மிடில் ஓவர்களில் நாங்கள் ரன் சேர்த்திருந்தோம். சூர்யகுமாருடன் இணைந்து இன்னும் 20 முதல் 25 ரன்கள் சேர்க்க வேண்டுமென நினைத்தோம். 175 ரன்கள் வரை என்பதும் நல்ல ஸ்கோராக இருந்தது. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் துப்பாக்கி போன்ற சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.

அவர்களுக்கு எதிராக இது போன்ற ஒரு பிட்ச்சில் ரன் சேர்ப்பதே கடினம். நெருக்கடி இருந்தாலும் அவர்கள் அதனை நிதானமாக கையாளுவார்கள். முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் சரியான இடத்தில் ஸ்டம்பை நோக்கி பந்து வீச வேண்டும் என்பது பற்றி பேசி இருந்தோம். அதைத் தான் அவர்கள் இருவரும் செய்து முடித்தனர்.

கோலியுடைய க்ளாஸ் என்ன என்பது எங்களுக்கு தெரியும். 15 வருடங்களாக ஆடும் போது ஃபார்ம் என்பது ஒரு பிரச்சனையே கிடையாது. அனைத்தையும் இறுதி போட்டிக்காக அவர் சேர்த்து வைத்துள்ளார் என நான் நினைக்கிறேன். ஒரு அணியாக நாங்கள் மிக நிதானமாக இருப்பதால் இறுதி போட்டியிலும் சிறந்த முடிவுகளை எடுப்போம் என நம்புகிறேன். இங்கிலாந்துக்கு எதிராகவும் நாங்கள் பயப்படாமல் சிறப்பாக ஆடினோம்” என கூறினார்.

அதே போல 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை கைப்பற்றுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, “நாங்கள் நிச்சயம் முடிந்த வரை எங்கள் முயற்சியை செய்வோம். அணியும் நல்லதொரு நிலையில் உள்ளது. இறுதி போட்டியிலும் நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்” என ரோஹித் கூறியுள்ளார்.

சற்று முன்