- Advertisement -
Homeவிளையாட்டுIND vs BAN: மிகப்பெரிய சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா.. பொட்டலம் கட்டிய பங்களாதேஷ்.. அடுத்த...

IND vs BAN: மிகப்பெரிய சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா.. பொட்டலம் கட்டிய பங்களாதேஷ்.. அடுத்த போட்டியும் மிஸ் ஆனா 2 வருஷம் காத்திருக்கணும்..

- Advertisement-

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்று போட்டியானது கொழும்பு மைதானத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்தது.

பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவிற்கு இருந்த வேளையில் அதனை அவர் தவற விட்டுள்ளார்.

அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இதுவரை ஆசிய கோப்பை போட்டியில் மட்டும் சச்சின் 23 போட்டிகளில் பங்கேற்று 971 ரன்கள் குவித்துள்ளார். அதே வேளையில் 939 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ள ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் 33 ரன்கள் அடித்திருந்தால் சச்சினை முந்தி முதலிடத்தை பிடித்திருக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனதன் காரணமாக சச்சின் டெண்டுல்கரின் அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அதோடு இலங்கை அணிக்கு எதிராக செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது.

- Advertisement-

அந்த போட்டியிலும் ஒருவேளை அவரால் 33 ரன்கள் அடிக்க முடியாமல் போகும் பட்சத்தில் சச்சினின் சாதனையை தகர்க்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பே இல்லாமல் கூட போகலாம். ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு அடுத்து இந்திய அணி மீண்டும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க குறைந்தது இரண்டு வருடங்களாகவது தேவைப்படும்.

எனவே வயது மூப்பின் காரணமாக அப்போது ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவும் நேரலாம். எனவே சச்சின் டெண்டுல்கரின் வாய்ப்பை முறியடிக்க ரோகித் சர்மாவிற்கு அடுத்த இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டி மட்டுமே கைவசம் உள்ளது. அந்த போட்டியில் அவர் அந்த சாதனையை நிகழ்த்துவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்