- Advertisement 3-
Homeவிளையாட்டுநீ உலக கோப்பை ஜெயிக்க தகுதியான ஆளு.. ஆனந்த கண்ணீர் விட்ட ஹர்திக்.. அன்பு முத்தம்...

நீ உலக கோப்பை ஜெயிக்க தகுதியான ஆளு.. ஆனந்த கண்ணீர் விட்ட ஹர்திக்.. அன்பு முத்தம் கொடுத்த ரோஹித்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி 17 ஆண்டுகளாக டி20 உலக கோப்பை தொடரை வெல்ல முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அதனை தொட்டு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த விதமும் இரண்டாவதாக முதல் 15 ஓவர்கள் பந்து வீசிய விதமும் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை யாருக்கும் கொடுக்கவில்லை.

இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடத் தொடங்கியதும் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தனர். ஆனாலும் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடாத விராட் கோலி, இந்த முறை தனது அணிக்காக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரும் அக்சர் படேலும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இந்திய அணி 176 ரன்கள் எடுத்திருந்தது.

தென்னாபிரிக்க அணியும் முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் அதிரடியை காட்டியதால் இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் தான் இருந்தது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருக்க கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் வேண்டும் என்ற நிலைதான் தென்னாபிரிக்க அணிக்கு இருந்தது. முன்னதாக சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து ஒன்பது ஓவர்கள் வீசி 106 ரன்கள் கொடுத்திருந்தனர்.

இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் போட்டி மாற கடைசி கட்டத்தில் ஹர்திக், பும்ரா அர்ஷ்தீப் சிங் என மூன்று பேருமே 5 ஓவர்களை மிக கச்சிதமாக வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் இந்திய அணி சிறப்பான வெற்றியும் பெற்றிருந்தது.

- Advertisement 2-

11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை தற்போது சொந்தமாக்கி உள்ளது. தோனி தலைமையில் கோப்பையை கடைசியாக வென்றிருந்த இந்திய அணி தற்போது ரோஹித் ஷர்மா தலைமையில் புதிய வரலாறு படைத்துள்ளதுடன் அவரும் கோலியும் இணைந்து ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளதும் கிரிக்கெட் ரசிகர்களை மனமுருக வைத்துள்ளது.

இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சிராஜ் உள்ளிட்ட பலரும் ஆனந்த கண்ணீர் வடித்திருந்தனர். அப்படி ஒரு சூழலில் கடைசி கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ரோஹித் ஷர்மா முத்தமிட்டது தொடர்பான புகைப்படங்கள், பலரையும் தற்போது மனம் நெகிழ வைத்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் பல விமர்சனங்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா, தற்போது இந்திய அணி கோப்பையை வெல்ல கடைசி இரண்டு ஓவர்களில் மில்லர், ஹென்ரிச் கிளாஸன் ஆகியோரின் விக்கெட்டை எடுத்தது தான் போட்டியின் திருப்புமுனையாக இருந்து இந்திய அணி கோப்பையையும் வென்றிருந்தது. இதற்காக தான் ரோஹித் ஷர்மா தனது துணை கேப்டனுக்கு அன்பு முத்தத்தையும் கொடுத்திருந்தார்.

சற்று முன்