வீடியோ: 6, 6, 4… 92 KPH… வெளுத்து கட்டிய ரோகித் சர்மா.. பாக் துணை கேப்டன் ஓவரில் பந்து பஞ்சாய் பறந்தது

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டமானது இன்று இலங்கை கொழும்பு மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் லீக் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 266 ரன்கள் அடித்து அசத்தியிருந்தாலும் மழை காரணமாக அந்த போட்டி தடைப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது செப்டம்பர் 10-ஆம் தேதி இன்று துவங்கி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது கடந்த போட்டியை காட்டிலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியான துவக்கத்தை வழங்கியது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஷாஹீன் அப்ரிடியின் முதல் ஓவர்லேயே சிக்ஸரை விளாசி ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரில் சிக்சரை அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதோடு நிற்காமல் இந்த போட்டியில் 49 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் சுப்மன் கில்லும் 52 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்து அசத்தியது. பாகிஸ்தானின் துணை கேப்டனான சதாப் கான் ஓவரை ரோகித் சர்மா பிரித்து மேய்ந்தார் என்றே கூறவேண்டும். அவர் ஓவரில் 6,6,4 என தொடர்ச்சியாக அவர் அடித்தார்.

- Advertisement -

பின்னர் இருவருமே ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி மழை குறுக்கீட்டின் போது 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவிர்த்து வலுவான நிலையில் உள்ளது. பாக்கிஸ்தான் அணியின் பவுலர்கள் இன்று தடுமாறினாள் என்றே கூற வேண்டும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாஹீன் அஃப்ரிடி ஓவரை சுப்மன் கில் பிரித்து மேய்ந்தார்.

மொத்தம் 5 ஓவர்களை வீசிய ஷாஹீன் அஃப்ரிடி 37 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கோலி இறங்கியதும் அவரை அவுட் ஆக்கும் நோக்கில் ஷாஹீன் அஃப்ரிடியை பாபர் அசாம் பந்துவீச வைத்தார். ஆனால் யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த ஓவரில் சுப்மன் கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் நசீம் ஷா சற்று கட்டுக்கோப்பாக பந்து வீசினார் என்றே கூறவேண்டும். 5 ஓவர்களை வீசிய அவர் 23 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

- Advertisement -

சற்று முன்