- Advertisement -
Homeவிளையாட்டுகோலி, கில் எல்லாம் இல்ல.. இவர் தான் ரொம்ப டேஞ்சர்... அடிக்க ஆரமிச்சா அவ்ளோ தான்...

கோலி, கில் எல்லாம் இல்ல.. இவர் தான் ரொம்ப டேஞ்சர்… அடிக்க ஆரமிச்சா அவ்ளோ தான் – லபுஷேன் குருத்து

- Advertisement-

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறும் என்று கணிக்கப்பட்டு வருகின்றன.

வழக்கம் போல் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சிறப்பாக தயாராகி வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசி நேரத்தில் ஷேன் அப்பாட்டை நீக்கிவிட்டு, நட்சத்திர பேட்ஸ்மேனான லபுஷேனை அணிக்குள் கொண்டு வந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது அந்த அணி. அதேபோல் பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்களும் ஃபார்முக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்காமல் எளிதாக ரன்களை விளாசி வருகிறார் ரோகித் சர்மா. போட்டியில் அவர் அடிக்க தொடங்கிவிட்டால், அவரை நிறுத்துவது சாதாரணமல்ல என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா நடந்து வரும் போது, அவரிடமே நேரடியாக, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கண்காணிக்கிறேன் என்று கூறினேன். ஏனென்றால் இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் பலமிக்க வீரர்கள். அவர்களிடம் இருந்து சிறந்தவற்றை கற்றுக் கொள்ள முடியும்.

- Advertisement-

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து தான் எங்களின் தவறை திருத்திக் கொள்ள முடியும். நாங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு, அனைவரும் இணைந்து முன்னேற்றம் அடைவோம் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பற்றி ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் புகழ்ந்து பேசியுள்ள கருத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, கண் இமைக்கும் நேரத்தில் 81 ரன்களை எட்டினார். பின்னர் மேக்ஸ்வெல்லின் அதிர்ஷ்டவசமான கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்