ரோகித் சர்மாலாம் அணியில கூட இருக்க முடியாது.. கேப்டன் பதவி தான் காப்பாத்துது.. உ.கோ-லாம் கஷ்டம் தான்.. ஆஸி. லெஜன்ட் பரபரப்பு பேச்சு

- Advertisement -

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை நடத்திய இங்கில்காந்து அணி, தொடரின் பாதியில் சில சொதப்பல்களை செய்தது. இதன் காரணமாக வாழ்வா சாவா சூழலுக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டது. ஆனால் அப்போதும் இது எங்கள் உலகக்கோப்பை, இதனை எப்படி வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று இங்கிலாந்து அணியினர் ஆக்ரோஷமாக கூறினர்.

ஆனால் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரை வெல்வது கடினம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் பிளிவெட் தெரிவித்துள்ளார். இந்திய அணி குறித்து கிரேக் பிளிவெட் பேசும் போது, என்னுடைய கவலையெல்லாம் இந்திய அணியின் கேப்டன்சி மீது தான்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா நூலிழையில் தப்பியுள்ளார். இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய அணி தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. எப்போதும் ஐசிசி தொடர்களை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருப்பார்கள்.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாந்து செல்வார்கள். அதேபோல் தான் இந்த உலகக்கோப்பை தொடரும் அமையும் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் செயல்பாடுகள், அணித் தேர்வில் தவறுகளை பார்க்க முடிகிறது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை தொடர்ந்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் மீண்டும் விராட் கோலி கேப்டன்சி செய்வார் என்ற நம்பிக்கை இல்லை.

- Advertisement -

என்னை பொறுத்தவரை விராட் கோலி கேப்டன்சி மனநிலையில் இருந்து வெளிவந்துவிட்டார். ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதால் மட்டுமே இந்திய அணியிலும் நீடிக்கிறார். இல்லையென்றால் அணியில் கூட ரோகித் சர்மா இருக்க மாட்டார் என்று விமர்சித்துள்ளார். இதனால் இந்திய அணி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

பார்ட் டைம் கேப்டனாக பல்வேறு வெற்றிகளை பெற்ற ரோகித் சர்மா, முழு நேர கேப்டனாக மாறிய போது சொதப்பலாக செயல்பட்டு வருகிறார். டி20 உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று ரோகித் சர்மாவின் சொதப்பல்கள் கணக்கில் கொள்ளப்படாமலேயே உள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடர் ரோகித் சர்மாவுக்கு அக்னி பரீட்சையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்