Homeகிரிக்கெட்பாக் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித்தான் என்னிடம் இதை செய்ய சொன்னார்... அது தான் அந்த...

பாக் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித்தான் என்னிடம் இதை செய்ய சொன்னார்… அது தான் அந்த விக்கெட்டிக்கு காரணம் – குல்தீப் யாதவ் பேச்சு

-Advertisement-

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி 8 விக்கெட்டுகளை வென்றும் 38 ரன்களுக்கு இழந்தது பாகிஸ்தான் அணி. இதனால் இந்திய அணியின் வெற்றி எளிதாக அமைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்களே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் திருப்புமுனையாக மாறியது. இந்த போட்டியில் குல்தீப் யாதவை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முக்கியமான துருப்புச்சீட்டாக பயன்படுத்தினார்.

-Advertisement-

இமாம் உல் ஹக் பேட்டிங் செய்த போது ஒரேயொரு ஓவர் மட்டும் குல்தீப் யாதவ் வீசிய நிலையில், பவுண்டரி ஒன்றை விட்டுக் கொடுத்தார். இதன்பின் குல்தீப் யாதவை அட்டாக்கில் இருந்து வெளியேற்றினார். இதன்பின் முகமதி ரிஸ்வான் பேட்டிங் செய்யும் போது மீண்டும் அட்டாக்கில் வந்தார். இவரும் ஜடேஜா வீசிய ஸ்பெல்லில் 5 ஓவர்களில் 17 டாட் பால்களை வீசினர்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் பேசும் போது, பாபர் அசாம் – ரிஸ்வான் இருவரும் பெரிதாக அட்டாக் செய்யவே இல்லை. நான் எனது வேரியன்ஸ் மற்றும் வேகத்தில் தான் கவனமாக இருந்தேன். என்னுடைய முதல் 7 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அப்போது தான் திடீரென சிராஜ் அட்டாக்கில் வந்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

-Advertisement-

அப்போது கேப்டன் ரோகித் சர்மா என்னிடம் கூடுதலாக ஒரு ஓவர் வீச சொன்னார். அந்த ஓவரில் தான் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதன் மூலமாக பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் பாகிஸ்தான் அணியையும் தடுக்க முடிந்தது. கீப்பராக இருந்த கேஎல் ராகுல் ஸ்வீப் ஷாட் ஆட முயற்சிக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அதேபோல் சகீலை கடந்த இரு போட்டிகளை கவனித்து வந்தேன். நான் ஸ்லோவாக வீசுவேன் என்று சகீல் நினைத்தார். ஆனால் பந்து சறுக்கியது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா வைத்த நம்பிக்கை காப்பாற்றியுள்ளார் குல்தீப் யாதவ்.

-Advertisement-

சற்று முன்