- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த கேள்விக்குலாம் என்னால பதில் சொல்ல முடியாது... எனக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்ல.....

இந்த கேள்விக்குலாம் என்னால பதில் சொல்ல முடியாது… எனக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்ல.. பிரஸ் மீட்டில் கடுப்பான ரோகித் சர்மா

- Advertisement-

இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. சரியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த நிலையில், ரோகித் ஷர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கண்டியில் நடைபெற்றது. அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இணைந்து இந்திய அணியை அறிவித்தனர். கிட்டத்தட்ட ஆசிய கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட அதே இந்திய அணியைதான் உலகக்கோப்பைக்கும் கட் காபி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 15 வீரர்கள் கொண்ட குழுவில் இடம்பெறவில்லை. விக்கெட்கீப்பர்களாக இஷான் கிஷனும், கே.எல்.ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஹால், அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர், உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது பொதுமக்களின் பார்வை எப்படி இருக்கும் என கேட்ட கேள்விக்கு ரோகித் ஷர்மா நிதானத்தை இழந்தார். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள் என்று. வெளியில் என்ன நடக்கிறது என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை.

- Advertisement-

இந்தியாவிலும் உலகக்கோப்பையின் போது இதுபோன்ற கேள்வியை கேட்காதீர்கள். அங்கேயும் நான் பதிலளிக்க மாட்டேன். இதுபோன்ற விஷயங்கள் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எங்களது கவனமே வேறு. நாங்கள் இது குறித்து கவனம் செலுத்த மாட்டோம் என மூஞ்சியில் அடித்தார் போல் ரோகித் ஷர்மா பதிலளித்தார்.

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி அக்டோபர் 8ம் தேதி நடக்கிறது. பின் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் மோடி மைதானத்தில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது.

சற்று முன்