- Advertisement 3-
Homeவிளையாட்டுரோகித் சர்மா எடுத்த தடாலடி முடிவு.. முக்கிய வீரருக்கு வாய்ப்பு மறுப்பு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

ரோகித் சர்மா எடுத்த தடாலடி முடிவு.. முக்கிய வீரருக்கு வாய்ப்பு மறுப்பு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்று பிரிட்ஜ் டவுனில் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா எடுத்த முடிவு தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தத் தொடர்கள் எல்லாம் இறுதி கட்ட பயிற்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது ரிஷப் பந்த் காயம் காரணமாக விளையாடத நிலையில் அவருக்கு பதிலாக எந்த விக்கெட் கீப்பரை சேர்க்கலாம் என்பதுதான் கேள்வியாக இருந்தது.

இதில் ஏற்கனவே சஞ்சு சம்சன் தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்து இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் பல அதிரடி ஆட்டங்களை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் சீனியர் என்ற முறையில் சஞ்சு சாம்சனுக்கு தான் இந்த இடம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் ரோகித் சர்மா தன்னுடைய மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்து அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். இதனால் கடுப்பான சஞ்சு ரசிகர்கள், நீங்கள் மும்பை இந்தியன்ஸ் டீமை கூட்டிக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் செல்லவில்லை என்று கருத்துக்களை கூறுவருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அணியில் சில மாற்றங்களை நாங்கள் செய்து வந்திருக்கின்றோம்.

- Advertisement 2-

எனினும் முடிவை நாங்கள் சாதாரணமாக எண்ணி விட மாட்டோம். ஒவ்வொரு தொடரும் முக்கியமானது என்று பேசி இருக்கிறார். ஒரு சிலர் ரோகித் சர்மாவின் இந்த முடிவுக்கு அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாதது காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது உள்ள அணியில் ஜடேஜாவை தவிர வேறு யாரும் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. இந்த காரணத்திற்காகத்தான் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு இருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கிஷன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று நடுவரிசையில் சூரியகுமார் யாதவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் அறிமுகவீரராக வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சற்று முன்