- Advertisement 3-
Homeவிளையாட்டுசே, இப்டி ஆயிடுச்சே.. ரெய்னா, கெயிலின் வாழ்நாள் சாதனையை நொறுக்கும் சூப்பர் வாய்ப்பை தவற விட்ட...

சே, இப்டி ஆயிடுச்சே.. ரெய்னா, கெயிலின் வாழ்நாள் சாதனையை நொறுக்கும் சூப்பர் வாய்ப்பை தவற விட்ட ரோஹித்..

- Advertisement-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் தங்களின் கடைசி போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அடித்து நொறுக்கி பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளை சூப்பர் 8 சுற்றில் வென்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலே அரை இறுதி சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலைதான் இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கோ இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் களமிறங்கி இருந்தது. அப்படி ஒரு சூழலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய இந்திய அணியில் கோலி டக் அவுட்டாகி மீண்டும் ஒருமுறை ஏமாற்றமளிக்க இன்னொரு புறம் ரோஹித் ஷர்மா ருத்ர தாண்டவத்தை ஆடிக் கொண்டிருந்தார்.

- Advertisements -

இந்திய அணி 52 ரன்கள் தொட்ட போது 50 ரன்களை தனியாளாக சேர்த்த ரோஹித் ஷர்மா, 10 ஓவர் முடிவதற்குள்ளாக 90 ரன்களையும் நெருங்கி விட்டார். இதனால் டி20 வரலாற்றில் முதல் ஆளாக 200 ரன்களை எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் போல்ட் அவுட்டாகி இருந்தார் ரோஹித். 41 பந்துகளில் 8 கிக்ஸர்கள், 7 ஃபோர்களுடன் அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா, 92 ரன்களில் அவுட் ஆகி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா என அனைவரும் நல்ல பங்களிப்பை அளிக்க, இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளில் 205 ரன்களை எடுத்திருந்தது. இதனிடையே, ரோஹித் ஷர்மா தனது அதிரடி மூலம் சில முக்கியமான சாதனைகளையும் படைத்திருந்தார். ஆனால், அதே வேளையில் முக்கியமான இரண்டு சாதனையை ரோஹித் ஷர்மா நூலிழையில் தவற விட்டது பற்றி தற்போது பார்க்கலாம்.

- Advertisement-

இந்திய அணி தரப்பில் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ரன் அடித்த வீரராக சுரேஷ் ரெய்னா இருந்து வருகிறார். இவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதனை முறியடிக்கும் வாய்ப்பை 10 ரன்களில் தவற விட்டிருந்தார் ரோஹித் ஷர்மா. இன்னொரு புறம் டி20 உலக கோப்பையில் அதிவேக சதமாக 47 பந்துகளில் க்றிஸ் கெயில் அடித்தது தான் சாதனையாக இருந்தது. ஒருவேளை 41 பந்துகளை எதிர் கொண்டு அவுட்டான ரோஹித் சர்மா, அடுத்த 6 பந்துகளில் 8 ரன்களை எளிதாக எடுத்து கெயில் சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டாக ரெய்னா மற்றும் கெயில் ஆகியோரின் முத்தான சாதனையை சொந்தமாக்கும் வாய்ப்பையும் இழந்திருந்தார் ரோஹித் ஷர்மா.

சற்று முன்