- Advertisement 3-
Homeவிளையாட்டுகேப்டன்னா இப்படி இருக்கனும்... அணிக்காக 5 சதங்கள் மிஸ்... எனக்கு ஏமாற்றாம்ப்பா.. ரோகித் குறித்து...

கேப்டன்னா இப்படி இருக்கனும்… அணிக்காக 5 சதங்கள் மிஸ்… எனக்கு ஏமாற்றாம்ப்பா.. ரோகித் குறித்து சோயப் அக்தர் பெருமிதம்

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இவர் குவித்து இருக்கும் ரன்கள் அடிப்படையில், இந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் அடித்த 131 ரன்கள், இந்த தொடரில் இவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் ஷர்மா 24 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதன் காரணமாக இந்திய அணியின் ஒட்டுமொத்த ஸ்கோர் 300-ஐ கடந்தது.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் தென் ஆப்பிரிக்கா 327 என்ற கடின இலக்கை துரத்தியது. எனினும், இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி 83 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் தனது இரண்டாவது தோல்வியை பதிவு செய்து இருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்ப 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக தனது எட்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். அதில் ரோகித் பேட்டிங்கில் கொஞ்சம் பொறுமையாக செயல்பட்டு இருந்தால், ஐந்து சதங்களை அடித்திருக்க முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement 2-

நேற்றைய போட்டி குறித்து பேசிய ஷோயப் அக்தர், “ரோகித் ஷர்மா அனைத்து விதமான ஷாட்களையும் அடிக்கக்கூடியவர். தப்ரியாஸ் ஷம்சி இதுபோன்ற பந்துகளை ரோகித் ஷர்மாவுக்கு வீசி இருந்தால், ரோகித் குறைந்தபட்சம் 15 முதல் 20 சிக்சர்களை விளாசி இருப்பார். ரோகித் கூடுதலாக பல ஓவர்கள் விளையாடி இருந்தால், இந்திய அணியின் ஸ்கோர் 430-க்கும் அதிகமாக சென்றிருக்கும். ”

“நடப்பு உலகக் கோப்பை தொடரில் மட்டும் ரோகித் ஷர்மாவால் ஐந்து சதங்களை அடித்திருக்க முடியும். அவர் இவ்வாறு அடிக்காதது சற்று ஏமாற்றமாகவே உள்ளது. அவர் கேப்டன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது அதிரடி ஆட்டம், விராட் கோலி மற்றும் அவரைத் தொடர்ந்து வரும் வீரர்களுக்கு நன்றாக விளையாட செய்யும். விரைவில் அவர் அதிரடியான சதம் அடிப்பார் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

சற்று முன்