Homeகிரிக்கெட்13 ஆண்டு சோதனைக்கு முற்றுப்புள்ளி... ரோகித் சர்மா படைத்த மாஸ் ரெகார்ட்.. தோற்றாலும் கொண்டாடி தீர்க்கும்...

13 ஆண்டு சோதனைக்கு முற்றுப்புள்ளி… ரோகித் சர்மா படைத்த மாஸ் ரெகார்ட்.. தோற்றாலும் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..

-Advertisement-

ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 352 ரன்களை குவித்தது.

தொடர்ந்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் விளையாடினர். நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை விழிப்படுத்த துவங்கினார். இந்த விளைவாக அவர் 31 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இது அவருடைய 52ஆவது அரை சதமாகும்.

-Advertisement-

நிச்சயம் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 81 ரன்கள் இருக்கும்போது மாக்ஸ்வெல்லிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி, ஷ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் சிறப்பாகவே ஆடினார். ஆனால் வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

கடைசியில் ரவீந்திர ஜடேஜா சற்று போராடினார். ஆனால் அவரும் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். முடிவில் இந்திய அணி, 49.4 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

-Advertisement-

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும், ரோகித் சர்மா இதில் அருமையான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே நாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக நியூசிலாந்த் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்டில் இருந்தார். ஆனால் தற்போது ரோகித் சர்மா அந்த சாதனையை தன்வசம் ஆக்கினார்.

ஒரே நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் பட்டியல்:

  • 257 – ரோஹித் சர்மா, இந்தியா
  • 256 – மார்ட்டின் குப்டில், நியூசிலாந்து
  • 230 – பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து
  • 228 – கிறிஸ் கெய்ல், வெஸ்ட் இண்டீஸ்
  • 186 – எம்.எஸ். தோனி, இந்தியா

அதே போல கடந்த 13 ஆண்டு காலமாக இந்திய வீரர்கள் யாரும் ஒரு நாள் போட்டியில் பவர் பிளேவில் அரைசதம் அடிக்காமல் இருந்தனர். தற்போது அந்த தொடர் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பவர் பிளேவில் அரை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் ரோகித் சர்மா. இந்த பவர் பிளேவில் அவர் 54 ரன்கள் அடித்துள்ளார். இதுவே அவரது அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராக அவர் பவர் பிளேவில் 44 ரன்கள் அடித்திருந்தது தான் அவரது அதிகபட்ச பவர் பிளே ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோகித்தின் இந்த அதிரடி ஆட்டமும், சாதனையும் ரசிகர்களை ஓரளவிற்கு ஆறுதல் படுத்தி இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த போட்டியில் மட்டும் இந்திய அணி வென்றிருந்தால் ஆஸி அணியை வாஷ்அவுட் செய்திருக்க முடியும். ஆனாலும் இரண்டிற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் இந்திய அணி இந்த தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்