Homeகிரிக்கெட்வெறும் 175 ரன்கள்.. ரோகித் சர்மா செய்ய போகும் சம்பவம்.. வெயிட்டிங்கில் ஹிட்மேன் ரசிகர்கள்

வெறும் 175 ரன்கள்.. ரோகித் சர்மா செய்ய போகும் சம்பவம்.. வெயிட்டிங்கில் ஹிட்மேன் ரசிகர்கள்

-Advertisement-

விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தவர் ரோகித் சர்மா. 2013ஆம் ஆண்டு தோனி அமைத்து கொடுத்த பாதையில் சிறப்பாக பயணித்து வருகிறார். மிடில் ஆர்டரில் தொடங்கிய பயணம், தொடக்க வீரராக மாறிய போது, சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவரானார் ரோகித் சர்மா.

அதன்பின் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 5 முறை கோப்பையை வென்றதால், அவரை கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதன்பின் கேப்டன்ஷியில் இருந்து விராட் கோலி விலகிய பின், ரோகித் சர்மா மட்டுமே கேப்டன்ஷியை சிறப்பாக மேற்கொள்ளக் கூடிய நபராக இந்திய அணியில் இருந்தார்.

-Advertisement-

கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் அசத்துபவர் ரோகித் சர்மா. 10 ஓவர்களை கடந்துவிட்டால் ரோகித் சர்மாவை எந்தவொரு பந்துவீச்சாளராலும் கட்டுப்படுத்த முடியாது. இந்த புல் ஷாட் புலியை சர்வதேச வேகப்பந்துவீச்சாளர்கள் கூட தடுக்க முடியாமல் ஏராளமான முறை திணறியுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டிம் மட்டும் இதுவரை 30 சதங்கள், 3 இரட்டை சதங்களை விளாசியவர். அதேபோல் 48 முறை அரைசதங்கள் விளாசியுள்ள ரோகித் சர்மா இதுவரை 243 போட்டிகளில் விளையாடி 9,825 ரன்களை விளாசியுள்ளார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 175 ரன்கள் விளாசினால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களையும் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

-Advertisement-

இதுவரை இந்திய அணியில் இருந்து சச்சின், விராட் கோலி, கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் தோனி உள்ளிட்ட 5 வீரர்கள் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை விளாசியுள்ளனர். அவர்களுக்கு பின் 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைக்கவுள்ளார்.

அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் 5 சதங்களை விளாசிய ரோகித் சர்மா, இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையுடன் ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹிட்மேனின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-Advertisement-

சற்று முன்