- Advertisement -
Homeவிளையாட்டுதோனி இடத்துல இன்னைக்கி ரோஹித் நிக்குறாப்ல.. மனமுடைய வைத்த அந்த ஒரு சோகம்.. எப்படி மீண்டு...

தோனி இடத்துல இன்னைக்கி ரோஹித் நிக்குறாப்ல.. மனமுடைய வைத்த அந்த ஒரு சோகம்.. எப்படி மீண்டு வர போறாரோ..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்து ஏறக்குறைய ஒரு மாத காலமாகி விட்டது. ஆனாலும், இன்னும் அந்த சோகத்தில் இருந்து பலராலும் மீண்டு வர முடியவில்லை. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்து திகழ்ந்த போதிலும் ஆஸ்திரேலிய அணி அசத்தலாக ஆடி இந்திய அணியை கட்டுப்படுத்தி ஆறாவது முறையாக உலக கோப்பையையும் வென்றிருந்தது.

இதனைக் கண்டதும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் கண்ணீர் நடித்திருந்தனர். போட்டி முடிந்து வெளியே வந்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி கூட கண்ணீர் வடித்ததும் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி இருந்தது. இதை விட நல்ல வாய்ப்பு உலக கோப்பையை ஜெயிக்க அமையாது என்ற நிலையிலும் நூலிழையில் இந்திய அணி இந்த வாய்ப்பை தவற விட்டது.

- Advertisement -

இந்திய அணியின் சிறந்த கேப்டனான ரோஹித், உலக கோப்பைத் தொடர் முழுக்க சிறப்பாக பேட்டிங் செய்து தனது அணியை இறுதி போட்டி வரைக்கும் அற்புதமாக வழிநடத்தி இருந்தார். அதே போல, விராட் கோலியும் உலக கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்து தான் கிங் என நிரூபித்திருந்தார். இது தவிர முகமது ஷமி, பும்ரா உள்ளிட்ட பலரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்தும் இறுதி போட்டியில் நடந்த சொதப்பாலால் உலக கோப்பையும் பறி போயிருந்தது.

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் ஒரு மாதம் கழித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா கூட அதிலிருந்து வெளியே வருவது கடினமாக இருக்கிறது என சோகத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ரோஹித் குறித்து பிரபல நடிகர் சுனில் ஷெட்டி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“நாட்டை பெரிதாக பார்ப்பது தான் இந்திய அணியின் அழகு. அதனால் தான் அவர்களுக்கு இத்தனை மரியாதை உள்ளது. தோனி இருந்த இடத்தில் தான் தற்போது ரோஹித் இருக்கிறார். ஏனென்றால் அவர் செய்யும் அனைத்துமே தன்னலமற்றது. லட்சக்கணக்கான மக்கள் உங்களுக்காக ஆரவாரம் செய்யும் போது ரோஹித் நினைத்திருந்தால் சதங்களை அடித்திருக்கலாம். ஆனால் அணிக்காக ஒரு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுப்பது தான் தன் வேலை என ரோஹித் கூறினார்” என சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கிய மும்பை இந்தியன்ஸ், அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்