- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக் 50 அடிச்சத விட.. எங்க பேட்ஸ்மேன்கள் இப்படி பண்ணது தான் பெருசு - ரோஹித்...

ஹர்திக் 50 அடிச்சத விட.. எங்க பேட்ஸ்மேன்கள் இப்படி பண்ணது தான் பெருசு – ரோஹித் ஷர்மா..

- Advertisement 1-

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை ஆடி முடித்துள்ள ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தற்போது அரை இறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. இந்திய அணி இடம் பிடித்திருந்த பிரிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம் பிடித்திருந்தது.

மொத்தமுள்ள மூன்று சூப்பர் 8 போட்டிகளில் இரண்டில் இந்திய அணி தற்போது ஆடி முடித்து விட்டது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியுள்ள இந்திய அணி கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது. இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டை இந்திய அணி பெற்றுள்ளது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்தாலும் கூட அரை இறுதி வாய்ப்பை பெரிதாக அது பாதிக்காது என்று தான் தெரிகிறது.

சமீபத்தில் வங்காளதேச அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி முதல் 10 ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தாலும் அதனை தொடர முடியாமல் போனதால் அவர்கள் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடையும் சூழலும் உருவாகி இருந்தது.

இருபது ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டும் தான் வங்காளதேசம் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்ததால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறவும் செய்திருந்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் தற்போது அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங் நல்ல ஃபார்மிற்கு வந்தது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியையும் கொடுத்துள்ளது.

- Advertisement 2-

இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, “ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வது பற்றி தான் நீண்ட நாட்களாக பேசி வருகிறேன். நாங்கள் பிட்ச்சின் சூழலுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக செயல்பட்டு இருந்தோம். காற்று கொஞ்சம் அதிகமாக இருந்த போதிலும் நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம்.

என்ன விஷயமாக இருந்தாலும் 8 பேட்ஸ்மேன்களும் தங்களின் ரோல் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதனை செய்ய வேண்டும். ஒரே வீரர் 50 ரன் அடித்தும் நாங்கள் 197 ரன்கள் சேர்த்திருந்தோம். டி20ஐ பொருத்தவரையில் நான் அரை சதங்களையும், சதங்களையும் பெரிதாக நம்புவது கிடையாது. எதிரணியின் பந்துவீச்சாளர்கள் எந்த அளவுக்கு நெருக்கடி போடுகிறோம் என்பது தான் முக்கியம்.

அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியதை தான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் அணியையும் நல்ல நிலையில் வைத்துள்ளது. ஹர்திக் ஹர்திக்காகவே ஆடுவதை தான் நாங்கள் விரும்புகிறோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும்.

அவர் மிக முக்கியமான வீரரும் கூட. இதனை அவர் அடுத்த போட்டிகளிலும் தொடர்ந்தால் இந்திய அணியை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லவும் அவரால் முடியும். பந்து வீச்சாளர்களுடன் விவாதித்து செயல்பட்டிருந்தது அற்புதமாக இருந்தது. அவர்களும் சரியான நேரத்தில் சூழலை அறிந்து கொண்டு நன்றாக பந்த வீசி இருந்தனர்” என ரோஹித் கூறினார்.

சற்று முன்