- Advertisement -

துபேவுக்கு ஒரு நியாயம், தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு நியாயமா.. ரோஹித் ஷர்மா பாத்த தில்லாலங்கடி..

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இது பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பரவலாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியில் 20 முதல் 30 வீரர்கள் வரை டி 20 ஆடுவதற்காக தயாராக இருந்ததால் எந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக இருந்தது.

அப்படி இருக்கையில் இந்திய அணி தற்போது அறிவித்த வீரர்கள் விவரம் ரசிகர்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது. கே.எல் ராகுல், நடராஜன், சாய் சுதர்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் முதல் 15 லிஸ்டில் இடம்பெறாமல் போனது ரசிகர்களை மத்தியில் அதிக கேள்விகளை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

இதில் மற்ற வீரர்களை விட கே எல் ராகுல், ரிங்கு சிங் ஆகிய இரண்டு பேர் சேர்க்கப்படாதது தான் அதிக விமர்சனங்களையும், கண்டனங்களையும் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தினர் மீது உருவாக்கி உள்ளது. இதற்கிடையே ரசிகர்கள் மத்தியில் சில முடிவுகள் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதாவது சஞ்சு சாம்சன், சாஹல், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது தான்.

இதில் 30 வயதாகும் ஷிவம் துபே சிஎஸ்கேவில் அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணி மீதும் தாக்கம் ஏற்படுத்தியதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதே வேளையில் ஆல் ரவுண்டரான இவர், நிச்சயம் தொடர்ந்து பந்து வீச்சிலும் ஈடுபட வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அப்படி இருக்கையில் தான் ஷிவம் துபே மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு நடந்த விஷயத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் சில கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்தது பற்றி பேசியிருந்த ஷிவம் துபே, “எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்து என்னால் தூங்க முடியாத நிலைமை உருவானது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ‘நீ பேட்டிங் மற்றும் பந்துவீச்சை செய்ய வேண்டும்.

நீ அணிக்காக என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்’ ஏன ரோகித் என்னிடம் கூறினார். அதுதான் ஒரு கேப்டன் வீரர்கள் மீதும் வைக்கும் நம்பிக்கையாக என்னை உத்வேகப்படுத்தி இருந்தது” என கூறினார். ஷிவம் துபேவுக்கு ரோஹித் சர்மா கொடுத்த வாக்கை காப்பாற்றி இருந்தார்.

ஆனால் அதே வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியபோது ரோஹித் சர்மா அவரிடம் டி 20 உலக கோப்பையில் தேர்வாவது பற்றி சில கருத்துக்களை கூறி இருந்தார். அப்படி இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஷிவம் துபேவுக்கு வாக்கு கொடுத்த ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்கிடம் கூறிவிட்டு வாய்ப்பை கொடுக்காமல் போனது ரசிகர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல தினேஷ் கார்த்திக் தாண்டி சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் உள்ளிட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் தங்களது ஃபார்மை நிரூபித்துள்ளதால் தான் அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -

Recent Posts