- Advertisement -
Homeவிளையாட்டு200 ரன் அடிச்சும் அதை நெனச்சு பயந்தோம்.. செமில இங்கிலாந்துக்கு எதிரா இதான் எங்க பிளான்.....

200 ரன் அடிச்சும் அதை நெனச்சு பயந்தோம்.. செமில இங்கிலாந்துக்கு எதிரா இதான் எங்க பிளான்.. அடித்து பேசிய ரோஹித்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை டி20 உலக கோப்பைத் தொடரில் மொத்தம் ஆறு போட்டியில் ஆடி உள்ள நிலையில் அனைத்திலும் வெற்றி பெற்று தற்போது அரை இறுதிக்கும் முன்னேறிவிட்டது. முன்னதாக லீக் சுற்றில் மூன்று அணிகளையும், அதன் பின்னர் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளையும் வீழ்த்தியுள்ள இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை கைப்பற்ற இன்னும் இரண்டே இரண்டு வெற்றிகள் மட்டும் தான் பாக்கியுள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியை சூப்பர் 8 சுற்றில் தங்களின் கடைசி போட்டியில் எதிர்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி மிக எளிதாக ஆடி ரன் சேர்த்துக் கொண்டிருந்தது. ரோஹித் ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் ஆடி 92 ரன்கள் சேர்க்க, சூர்யகுமார், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 205 ரன்கள் சேர்த்திருந்தது.

இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியும் கொஞ்சம் கூட சளைக்காமல் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்க, இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கும் சற்று நெருக்கடி உருவாகியிருந்தது. ஆனால் குல்தீப் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்ததால் இந்திய அணியின் வெற்றியும் கடைசி ஓவர்களில் எளிதாக மாறி இருந்தது.

தொடக்க வீரர் ஹெட் மட்டும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டிருக்க அவரது விக்கெட்டையும் எடுத்து அசர வைத்திருந்தார் பும்ரா. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் தான் எடுத்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முன்பாகவே அரையிறுதி சுற்றை உறுதி செய்து விட்ட நிலையில், ஆஸ்திரேலியா முன்னேறுவது ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியின் முடிவில் தான் உள்ளது.

- Advertisement-

இதனிடையே இந்த வெற்றிக்கு பின்னர் பேசி இருந்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, “இந்த வெற்றி மனநிறைவாக உள்ளது. எதிரணி எந்த அளவுக்கு அச்சுறுத்தலை கொண்டுவரும் என்பது எங்களுக்கு தெரியும். இதனால் ஒரு அணியாக நாங்கள் என்ன வேண்டுமோ அதை சரியாக செய்து முடித்துள்ளோம். 200 ரன்கள் நல்ல ஸ்கோராக இருந்தாலும் இங்கே காற்று என்பது போட்டியை தீர்மானிக்கும் விஷயமாக இருந்ததால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆனால் அனைத்து வீரர்களுமே தனியாக தங்கள் பணியை சிறப்பாக செய்ததால் சூழலுக்கு ஏற்ற வகையிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்தோம். குல்தீப் யாதவின் பலம் என்ன என்பது தெரியும். இதனால் அவரை தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தோம். நியூயார்க்கில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அவருக்கு மிகப்பெரிய ரோல் உள்ளது என்பதும் தெரியும்.

அரையிறுதியில் வேறு எதுவும் வித்தியாசமாக நாங்கள் செய்யப் போவதில்லை. இதுவரை எப்படி ஆடினோமோ, அதே வகையில் ஆடி ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், இதுவரை நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதையே தொடர வேண்டுமென்று நினைக்கிறோம்” என ரோஹித் கூறினார்.

சற்று முன்