- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க எப்படி பேட்டிங் பண்ணனும்னு அஸ்வின், பும்ரா க்ளாஸ் எடுத்தாங்க.. தோற்ற பிறகு உண்மையை சொன்ன...

நாங்க எப்படி பேட்டிங் பண்ணனும்னு அஸ்வின், பும்ரா க்ளாஸ் எடுத்தாங்க.. தோற்ற பிறகு உண்மையை சொன்ன ரோஹித்..

- Advertisement 1-

நிச்சயம் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியால் வெற்றியை பெற முடியாது என்று தான் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அனைவருமே கூறியிருந்தனர். ஆனால் அந்த கருத்தை எல்லாம் முதல் போட்டியிலேயே தவிடு பொடியாக்கி இந்திய அணியை அவர்கள் மண்ணிலேயே வென்று அசத்தலான தொடக்கத்தை கொடுத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை தான் ஆடி வருகிறது. இது இந்திய மண்ணில் எடுபடாது என்று பலரும் கூறி இருந்த நிலையில் அது போல் தான் முதல் இன்னிங்சில் நடந்திருந்தது. இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸ் ஆடி முடித்திருந்த போது இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. அவர்களின் வெற்றி வாய்ப்பும் அசத்தலாக இருந்த அதே வேளையில் யாரும் எதிர்பாராத ஆட்டத்தை இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் ஆடி இருந்தனர்.

மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கிளம்ப, தனி ஒரு ஆளாக இங்கிலாந்து அணியை தூக்கி நிறுத்தினார் ஒல்லி போப். இவர் இங்கிலாந்து அணிக்காக அற்புதமாக அடி 196 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்தும் இரண்டாவது இன்னிங்ஸில் 436 ரன்கள் சேர்த்து, இந்திய அணிக்கு 231 ரன்களையும் இலக்காக நிர்ணயித்திருந்தனர். இதை நோக்கி ஆடிய இந்திய அணியில், முதல் இன்னிங்சில் நன்றாக ஆடிய அனைவருமே இந்த முறை சொதப்பியதால் இந்திய அணி 202 ரன்களில் ஆல் அவுட்டானது.

இன்னொரு புறம் இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி ஏழு விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார். இதனால் இங்கிலாந்து அணியும் 28 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்டை வென்றுள்ளது. இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தோல்வி பற்றி பேசியிருந்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, “எங்கே தப்பு நடந்தது என்பதை குறிப்பிடுவது கடினமாக உள்ளது. 190 ரன்கள் முன்னிலை வகித்த போது போட்டி எங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் இந்திய மண்ணில் அப்படி ஒரு அற்புதமான பேட்டிங்கை ஒல்லி போப் வெளிப்படுத்தினார்.

- Advertisement 2-

இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்களை எட்டிப் பிடித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது. அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான இடத்தில் நாங்கள் பந்து வீசிய போதும் எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை. இதற்கு ஒல்லி போப்பிறகு மிகப்பெரிய வாழ்த்தை சொல்ல வேண்டும்.

கடைசி கட்டத்தில் இறங்கி ஆடிய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்து, தொடக்க வீரர்கள் என்ன செய்ய வேண்டுமென உணர்த்தினார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். பலமாக இருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் அப்படி இருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்