- Advertisement 3-
Homeவிளையாட்டுரிங்கு சிங்குடன் சேர்ந்து ரோஹித் போட்ட பிளான்.. இந்தியா ஜெயிக்க காரணமா இருந்த அந்த வார்த்தை..

ரிங்கு சிங்குடன் சேர்ந்து ரோஹித் போட்ட பிளான்.. இந்தியா ஜெயிக்க காரணமா இருந்த அந்த வார்த்தை..

- Advertisement 1-

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி இருந்த கடைசி டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பட்டாசாய் வெடித்தனர். இருவருமே ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறவிட, நினைத்ததை விட அதிக ரன்களை நோக்கியும் அவர்கள் நடை போட்டனர்.

இரண்டு போட்டிகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் பலரின் வாய் பேச்சுகளை கேட்டிருந்த ரோஹித் ஷர்மா, இந்த முறை தனது பேட்டிங்கால் அனைவரது வாயையும் அடைத்தார். 121 ரன்கள் சேர்த்ததுடன் மட்டுமில்லாமல், சர்வதேச டி 20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

மறுபுறம் அவருடன் நிலைத்து நின்று ஆடிய ரிங்கு சிங்கும் 69 ரன்கள் எடுக்க, இருவரும் இணைந்து 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் ஆடியதால் இந்திய அணி எளிதில் வென்று விடும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், அந்த அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

இந்திய அணியை போல அவர்களும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஆகிய இருவரும் அரைசதமடித்தனர். அவர்களை தொடர்ந்து வந்த குல்பதீன், கடைசி கட்டத்தில் தனியாக போராடினார். ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் குல்பதீன் உதவியுடன் அந்த அணி 35 ரன்களை எடுக்க, போட்டியும் டை ஆனது.

- Advertisement 2-

தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 16 ரன்கள் எடுக்க பின்னர் ஆடிய இந்திய அணியும் 16 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2 வது சூப்பர் ஓவரில் இந்திய அணி 11 ரன்கள் எடுக்க பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, ரவி பிஷ்னோய் வீசிய மூன்றே பந்தில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியும் வெற்றியை உறுதி செய்தது.

தொடரை கைப்பற்றியதுடன் ஆட்ட நாயகன் விருது வென்ற பின் பேசிய ரோஹித் ஷர்மா, “கடைசியாக ஒரே போட்டியில் 3 முறை எப்போது பேட்டிங் செய்தேன் என ஞாபகமில்லை. ஐபிஎல் போட்டியில் நடந்துள்ளது என நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியில் கூட இப்படி நடந்ததில்லை. பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது தான் எங்கள் இலக்காக இருந்தது. என்ன வந்தாலும் அதற்கான நோக்கத்தை இழந்து விடக்கூடாது என்று தான் ரிங்கு சிங்கிடமும் நான் கூறினேன். அதிக நெருக்கடிக்கு மத்தியில் தான் நீண்ட நேரம் ஆட்டமிழக்காமல் ஆடி ரன் சேர்த்தோம்.

ரிங்கு சிங் கடைசியாக ஆடிய இரு தொடர்களில் தனது பேட்டிங் மூலம் என்ன செய்ய முடியும் என்பதை காட்டி உள்ளார். தனது பலத்தை அறிந்து அற்புதமாக ஆடும் ரிங்கு சிங், இந்திய அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். சிறந்த மனநிலையுடன் கடைசி கட்டத்தில் ஆடும் வீரர் ஒருவர் நமக்கு தேவை. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் ரிங்கு எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ அதைத் தான் இந்திய அணிக்காகவும் செய்து வருகிறார்” என இளம் வீரரையும் வெகுவாக பாராட்டி உள்ளார் ரோஹித் ஷர்மா.

சற்று முன்