- Advertisement -
Homeகிரிக்கெட்உங்களால ஒரு மேட்ச் கூட ஜெயிக்க முடியலையே என ரோகித் சர்மாவை சீண்டிய ரிப்போர்ட்டர். ரோகித்...

உங்களால ஒரு மேட்ச் கூட ஜெயிக்க முடியலையே என ரோகித் சர்மாவை சீண்டிய ரிப்போர்ட்டர். ரோகித் கொடுத்த சிறப்பான விளக்கம்.

-Advertisement-

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் பைனலில் விளையாட தயாராக உள்ளது. டாப் இரண்டு அணிகளான இந்தியா மற்றும் மற்றும் ஆஸ்திரேலியா அணி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை(ஜூன் 7) இந்த போட்டியில் விளையாட உள்ளது. ரிசர்வ் டே-வோடு சேர்த்து இந்த போட்டிக்கான காலம் ஜூன் 12 வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டி தொங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், இந்திய அணியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எனக்கான கடமை. அதே போல் சில கோப்பைகளை வெல்வது என்பது சிறப்பான ஒரு அனுபவமாக இருக்கும். ஆனால் அதற்காக அதையே யோசித்து அணி வீரர்களுக்கு அதிகப்படியான பிரஷர் கொடுப்பது சரியாக இருக்காது.

அடுத்த ஐந்து நாட்கள் நிச்சயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாக இருக்கும். அதே சமயம் கோப்பையை வெல்வது என்பது நிச்சயம் சவாலாக இருக்கும். எனக்கும் சரி, எனக்கு முன்பு இந்திய அணியை வழிநடத்துபவர்களுக்கும் சரி அதிகப்படியான கோப்புகளை வெல்ல வேண்டும் என்பது எண்ணம் எப்போதும் மனதில் இருக்கும். அப்படி தான் இந்த போட்டியை நிச்சயம் வென்று இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் எல்லோரும் விளையாடுகிறோம் என்று அவர் கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லையே, இது போன்ற சூழ்நிலை இந்தியா வீரருக்கு கூடுதல் பிரஷரை தராதா என கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, இதுவரை இந்திய அணி என்ன ஜெயித்துள்ளது என்ன ஜெயிக்கவில்லை என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது பற்றி திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதில்லை என்று அவர் பதில் அளித்தார்.

-Advertisement-

இதேபோன்று ஒரு கேள்வி ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையின் போதும் கேட்கப்பட்டது. அப்போதும் அவர் இதே மாதியான ஒரு பதிலை தான் கூறினார் என்பது குறிப்பிட தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா, கேஎல் ராகுல், ரிஷாப் பண்ட் போன்றோரை நிச்சயம் அந்த அணி மிஸ் செய்யும்.

இதையும் படிக்கலாமே: ஆஸ்திரேலியா மேட்ச்னாலே கோலி இந்த மாதிரி கொஞ்சம் வித்யாசமா தான் இருப்பாரு. இது மட்டும் நடந்தா வேடிக்கை கன்பார்ம் – ரவி சாஸ்திரி பேச்சு

அதேபோல் திருமணம் காரணமாக ருதுராஜ் இந்த அணியில் இருந்து விலகினார். அதன் காரணமாக ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்தார். அதேபோல் கேஎல் ராகுலுக்கு மாற்றாக இசான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் இந்த அணி உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-Advertisement-

சற்று முன்