சச்சின், ஜெயசூர்யா சாதனை எல்லாம் காலி… பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா படைத்த பிரமாண்ட சாதனை..

- Advertisement -

ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியது என்றே கூற வேண்டும். இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதில் ரோஹித் சர்மா 42 பந்துகளில் அரை சதம் விளாசி ஒரு நாள் போட்டியில் தனது ஐம்பதாவது அரை சதத்தை எட்டினார். இதற்கு முன் நேபாலுக்கு எதிராக நடந்த போட்டியிலும் அவர் அரை சதம் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து ரோகித் இந்த இன்னிங்ஸை தொடங்கினார். 49 பந்துகளில் 56 ரன்கள் அடித்த அவர் 17 வது ஓவரில் சதாப்கான் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த போட்டியில் அவர் நான்கு சிக்ஸர்களும் ஆறு பவுண்டர்களும் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி ஓபனிங் பார்ட்னர்ஷிப்பாக இந்தியாவிற்கு 121 ரன்கள் எடுத்தது. இதில் சுப்மன் கில் 52 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். அதில் 10 பௌண்டரிகள் அடக்கம். அவர் 18 வது ஓவரில் ஷாகின் அப்ரிடி வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

ரோகித் சர்மா இன்று அரை சதம் அடித்ததன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக முறை 50+ ரன்களை அடித்த வீரராக முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் (5, 50+ இலங்கை), சங்ககாரா (5, 50+ இந்தியா), சனத் ஜெயசூர்யா (5, 50+ வங்கதேசம்). இந்த வரிசையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆறு முறை 50+ பிளஸ் ரன்களை ரோகித் சர்மா குவித்துள்ளார்.

அதே போல இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தனது 50ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், இந்த சாதனையை எட்டிய எட்டாவது இந்திய பேட்ஸ்மனாக உள்ளார். இந்த வரிசையில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 96 அரை சதங்கள் அடித்துள்ளார். அடுத்து ராகுல் டிராவிட் 83, சௌரவ் கங்குலி 72, எம் எஸ் தோனி 73, விராட் கோலி 65, அசாருதின் 58, யுவராஜ் சிங் 52 அரை சதங்கள் அடித்துள்ளனர்

- Advertisement -

சற்று முன்