- Advertisement 3-
Homeவிளையாட்டுபிட்ச்ல இருந்து மண் சாப்பிட்டது இதுக்காக தான்.. ரசிகர்கள் குழப்பத்தை தீர்த்து வைத்த ரோஹித்..

பிட்ச்ல இருந்து மண் சாப்பிட்டது இதுக்காக தான்.. ரசிகர்கள் குழப்பத்தை தீர்த்து வைத்த ரோஹித்..

- Advertisement 1-

இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது எந்த அளவுக்கு அதன் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாத்தித்திருந்தது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பல ஆண்டுகளாக ஒரு ஏக்கமாகவே ரோஹித் மற்றும் கோலி உள்ளிட்ட பல இந்திய வீரர்களுக்கும் உலக கோப்பை என்பது இருந்து வந்தது. சில முறை, உலக கோப்பையை வெல்வதற்காக லட்டு போல சில வாய்ப்புகள் கிடைத்தும் இந்திய அணி அதனை தவற விட்டிருந்தது.

இதனால், இந்தாண்டு அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பையை எப்டியாவது இந்திய அணி கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தான் அனைவரது பார்வையும் இருந்து வந்தது. அதே போல, இதற்கு முன்பு நடந்த ஐசிசி உலக கோப்பைத் தொடரின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி செய்த தவறுகளை திருத்தி கொண்டு தென்னாபிரிக்க அணியை இறுதி போட்டியில் எதிர்கொண்டிருந்தது.

அதுவும் அவர்களுக்கு கடைசி கட்டத்தில் சிறப்பான பலன் கொடுக்க, இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை சொந்தமாக்கி உள்ளது. அடுத்து 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைத் தொடர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வைத்து நடைபெற இருக்கும் சூழலில், இந்த வெற்றி நிச்சயம் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக தான் மாறி உள்ளது.

இதனிடையே, இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மா, பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் ஐசிசி கோப்பையை சொந்தமாக்கி இருந்ததால் அதனை மிகவும் உணர்ச்சி பூர்வமாக கொண்டாடி தீர்த்திருந்தார். இந்திய அணி வென்றதும் ஃபீல்டிங் நின்ற அவர், அங்கேயே தரையில் படுத்து மைதானத்தை கொண்டாட்டத்தில் இடித்து முத்தமும் கொடுத்திருந்தார்.

- Advertisement 2-

இதன் பின்னர், பிட்ச்சில் இருந்து சிறிய மண்ணை வாயில் போட்டு சாப்பிடவும் செய்திருந்தார் ரோஹித் ஷர்மா. அப்படி ஒரு சூழலில் இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தற்போது ரோஹித் ஷர்மா மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“இது எதுவும் ஸ்க்ரிப்ட்டாக அமைக்கப்படவில்லை. அது ஒரு உள்ளுணர்வால் தான் நிகழ்ந்தது. அந்த தருணத்தை நான் உணர்ந்து கொண்டே இருந்தேன். நான் பிட்ச்சில் சென்ற போது அது எனக்கு கோப்பையை கொடுத்தது. என்னுடைய வாழ்நாள் முழுக்க இந்த மைதானத்தையும், பிட்ச்சையும் நான் நினைவில் வைத்திருப்பேன். இதனால், அதன் ஒரு பகுதி என்னிடம் இருக்க வேண்டுமென விரும்பி தான் அப்படி செய்தேன்” என கூறி உள்ளார்.

ரோஹித் பிட்ச் மண்ணை சாப்பிட்டது எந்த அளவுக்கு ரசிகர்களை நெகிழ வைத்திருந்ததோ அதே அளவுக்கு இதற்கான காரணமும் மனம் உருக வைத்துள்ளது.

சற்று முன்