- Advertisement -
Homeவிளையாட்டுகேப்டன்சில கலக்கியும் இப்டி ஆயிடுச்சே.. ரெண்டே மேட்சில் சரிவை சந்தித்த ரோஹித் ஷர்மா..

கேப்டன்சில கலக்கியும் இப்டி ஆயிடுச்சே.. ரெண்டே மேட்சில் சரிவை சந்தித்த ரோஹித் ஷர்மா..

- Advertisement-

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக உற்சாகத்தை கொடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் ரோஹித் ஷர்மாவிற்கு ஏற்பட்ட சரிவு மிகப்பெரிய அளவில் அவர்களை ஏங்க வைத்துள்ளது. இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்கள் யார் என கேட்டால் பலரும் தோனியின் பெயரை தான் நிச்சயம் சொல்வார்கள்.

குறுகிய காலத்தில் 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்ததுடன் மட்டுமில்லாமல் எப்படிப்பட்ட வீரர்கள் அணியில் இருந்தாலும் அவர்கள் மூலமாகவே எதிரணியினருக்கு சவாலாகவும் விளங்க வைக்க தோனியின் தலைமையால் நிச்சயம் முடியும். அந்த அளவுக்கு கேப்டனாக சிறந்த வழியில் இந்திய அணியை பயணிக்க வைத்திருந்தார் தோனி.

- Advertisement -

ஆனால், தோனியையே மிஞ்சும் அளவுக்கு ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி இருந்து வருவதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் 3 ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியை அழைத்து சென்ற ரோஹித் ஷர்மா, அதில் ஒரு கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்திருந்தார்.

அணியில் இருக்கும் இளம் வீரர்கள் தொடங்கி சீனியர் வீரர்கள் வரை ஒரே போல பார்க்கும் ரோஹித் ஷர்மா, யாராவது சொதப்பினால் கூட கண்டிப்பாக இருக்காமல் அவர்களை தேற்றி அடுத்த போட்டிக்கு தயாராக்குவதில் தான் வழி செய்வார். மேலும் பதற்றத்துடன் இருக்கும் இளம் வீரர்களை சரியான பாதையை பயணிக்க வைக்க உதவும் ரோஹித், அவர்களுக்கு சிறந்த தலைவராகவும் இருந்து வருகிறார்.

- Advertisement-

கடந்த டி20 உலக கோப்பையை வென்றதும் அதிலிருந்து ஓய்வினை அறிவித்த ரோஹித் ஷர்மா, தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். ஆனால், அதே வேளையில் கடந்த டி20 உலக கோப்பை வரை சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்த ரோஹித், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.

அதிலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடி ஆட்டத்தை ரோஹித் வெளிப்படுத்தி இருந்தாலும், நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு முறை கூட அவர் 25 ரன்களைத் தாண்டவில்லை. இப்படி கேப்டனாக வங்கதேச தொடரில் ஜொலித்த ரோஹித்தால் பேட்ஸ்மேனாக ஜெயிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

இதன் காரணமாக, தற்போது வெளியான டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பெரிய சரிவை கண்டுள்ளார் ரோஹித். வங்கதேச தொடருக்கு முன்பாக ஐந்தாவது இடத்தில் இருந்த ரோஹித் ஷர்மா, தற்போது 10 இடங்கள் சரிந்து 15 வது இடத்தில் உள்ளார். அவரது பேட்டிங் சராசரியும் 45்.46 ல் இருந்து 43.98 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் முதல் டெஸ்ட் முடிவில் 10 வது இடத்திற்கு கீழ் போயிருந்த கோலி, தற்போது மீண்டும் முன்னேற்றம் கண்டு 6 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்