இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதற்கான தொடக்க விழாவில் ரோகித் சர்மா பங்கேற்றார். அப்போது கிரிக்கெட் ரசிகர்களுடன் இணைந்து ரோகித் சர்மா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கர் தான் என்னுடைய குரு என்றும் நான் சிறுவயதிலிருந்தே அவருடைய பேட்டிங்கை பார்த்து தான் வளர்ந்தேன். வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற வீரர்களை எல்லாம் 16 வயதில் எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இன்றி அவர் விளையாடினார்.
அது எனக்கு பெரிய உந்துத்ச்லை கொடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் நிச்சயம் இந்த நிலை மாறும் 10 ,11 ஆண்டுகளில் நாங்கள் ஐந்து கோப்பையை வென்றிருக்கிறோம். ஆனால் இதற்கு அணி நிர்வாகம் தான் காரணம்.வீரர்களின் உழைப்பு தான் காரணம்.
ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கும். நாங்களும் அதற்காக தான் உழைத்து வருகிறோம். இந்தியாவில் இம்முறை உலகக்கோப்பை நடைபெறுவதால் இம்முறை எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் தனது உடல் தகுதியை மீட்கும் பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறார். அவர் உலக கோப்பைக்குள் தயாராகி விடுவார் என வேண்டிக் கொள்கிறேன்.
2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் தான் நடைபெறுகிறது. இதனால் உங்களைப் போலவே நானும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்த தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்காகத்தான் தற்போது நான் அமெரிக்காவுக்கு அடிக்கடி வந்து செல்கிறேன் என்று ரோகித் சர்மா கூறினார். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் தான் விளையாட உள்ளதை ரோகித் சர்மா மறைமுகமாக உறுதிப்படுத்தி இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.