- Advertisement -
Homeவிளையாட்டுஅவர் போட்ற பால் எல்லாமே விக்கெட் விழற மாதிரி இருக்கு... இதெல்லாம் நாங்க ஏற்கனவே யோசிச்சோம்...

அவர் போட்ற பால் எல்லாமே விக்கெட் விழற மாதிரி இருக்கு… இதெல்லாம் நாங்க ஏற்கனவே யோசிச்சோம் … கடைசி நேரத்துல பிட்ச் மாறுச்சி – வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேச்சு

- Advertisement-

இந்தியா மற்றும் இலங்கை அணி இடையே நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை குரூப் 4 சுற்றில் இந்திய அணி பரபரப்பான ஒரு வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி ஆரம்பத்தில் வேகமாக ஸ்கோர்களை உயர்த்தி இருந்தாலும் மிடில் ஆர்டரில் தடுமாறியது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 48 பந்துகளில் 53 ரன்கள் விலாசி நல்ல ஒரு துவக்கத்தை கொடுத்தார். அதே சமயம் மற்றும் துவக்க வீரரான சுப்மன் கில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்தடுத்து வந்து வீரர்களிடம் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் அமையாததால் இந்திய அணி தடுமாறியது. 180 ரன்களில் ஆல் அவுட் ஆகி விடுவார்கள் என்ற நிலையிலிருந்த அணியை அக்சார் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்து படிப்படியாக ஸ்கோரை உயர்த்தி வந்தனர். 49.1 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 213 ரன்களை குவித்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்த இலங்கை வீரர்கள் பெரிதாக ரன் எடுக்கவில்லை. தனஞ்செய டி செல்வா 41 ரன்களும், துனித் வெல்லாலகே 42 ரர்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் காரணமாக இலங்கை அணி 41.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி மகத்தான வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா,

இது ஒரு நல்ல போட்டி. இந்த மாதிரி ஒரு பிரஷரான விளையாட்டை விளையாடுவதில் எங்களுக்கும் நல்ல ஆர்வமாக இருந்தது. பிட்ச் சற்று கடினமாக இருந்தது என்றே கூற வேண்டும். இதுபோன்று பிட்ச்சில் விளையாடுவது பற்றி ஏற்கனவே நாங்கள் யோசித்துள்ளோம்.

- Advertisement-

ஹர்திக் பாண்டியா தனது பவுலலிங்கில் மிக கடினமாக உழைத்து உள்ளார். அவர் தற்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறார். இதெல்லாம் ஒரு இரவில் நடந்து விடாது. அதற்கு பின்பு நிறைய உழைப்பு இருக்கிறது. அவரது பவுலிங்கை பார்க்கும் போது அனைத்து பந்துகளிலும் விக்கெட்டு எடுப்பது போன்று இருக்கும்.

அணியை பொறுத்தவரை அனைத்து பவுலர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். கடைசியில் பிட்ச் சற்று மாறியது. எனினும் எங்களது உணர்ச்சிகளை நாங்கள் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக சரியான பந்துகளை வீசினோம். குலதீப் யாதவ் மிகச்சிறப்பாக பந்து வீசினார். அவரது ரிதம் அவருக்கு மிக மிக முக்கியம். அவர் இந்திய அணிக்காக விளையாடாத சமயங்களில் அவரது குறை என்ன? எதையெல்லாம் சரி செய்து கொள்ளலாம் என்பதை நன்கு யோசித்து அதற்கு ஏற்ப உழைத்து திரும்ப வந்துள்ளார். அவரது உழைப்பிற்கான பலனை கடைசி பத்து ஓடியைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இது இந்திய அணிக்கு நல்ல ஒரு விடயம் என்று அவர் கூற வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

சற்று முன்