- Advertisement -
Homeவிளையாட்டுஅவர் விளையாடுவார்னு 5 நிமிசத்துக்கு முன்னாடி தான் தெரியும்... இவங்களுக்கு தான் நன்றி சொல்லணும்... அனுபவ...

அவர் விளையாடுவார்னு 5 நிமிசத்துக்கு முன்னாடி தான் தெரியும்… இவங்களுக்கு தான் நன்றி சொல்லணும்… அனுபவ வீரர் களத்துல இருக்கும்போது இதை எதிர்பாத்தோம் – ரோகித் பேச்சு

- Advertisement-

ஆசியக் கோப்பை குரூப் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சிறப்பான ஒரு வெற்றியை பெற்றுள்ளது. வெறும் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 356 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பவுலிங்கில் மிரண்டு போய் நின்றது என்றே கூற வேண்டும். அந்த அணி 32 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்தது போட்டியை முடித்துக்கொண்டது.

பாகிஸ்தான் அணியின் பௌலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் தெறிக்க விட்டார்கள் என்றே கூற வேண்டும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாஹீன் அப்ரிடி கூட பெரிய அளவில் ரன்களை கொடுத்தார். பத்து ஓவர்கள் வீசிய அவர் ஒரே ஒரு விக்கெட் மட்டும் எடுத்து 71 ரன்களை கொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை, ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மென் கில் 58 ரன்களும் எடுத்து அவுட் ஆக, கே.எல் ராகுல் 116 ரன்களும், கோலி 122 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்கள். இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா,

ஒரு வழியாக மழையை தண்டு இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு மிக முக்கிய காரணம் கிரௌண்ட்ஸ் மேன் தான். ஒரு முழு கிரவுண்டையும் கவர் செய்வது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்கு தெரியும். அதேபோல் அடுத்தடுத்த நாளுக்கான போட்டி இருக்கும்போது அடுத்தடுத்த நாள் தொடர்ந்து அந்த வேலையை செய்வது மிக கடினம். இந்திய அணியின் சார்பாக நாங்கள் அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட்டிங் செய்ய துவங்கியதும் விக்கெட் சிறப்பாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இரண்டு எக்ஸ்பீரியன்ஸ் பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மிகச் சிறப்பாக ஆடுவார்கள் என்பதை நாங்கள் எதிர்பார்த்தோம்.

- Advertisement-

பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவர் கடந்த சில மாதங்களாக இதற்காக கடுமையாக உழைத்து உள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்து கம் பேக் கொடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். பும்ராவிற்கு 27 வயது தான் ஆகிறது. இந்த வயதில் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது அவருக்கு சரியானது அல்ல ஆனால் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து தான் யார் என்பதை நிரூபித்துள்ளார். இந்தப் பார்மை அவர் தொடர்வார் என்று நான் நம்புகிறேன்.

அதேபோல் கே எல் ராகுலும் கடைசி நிமிடத்தில் அணிக்குள் வந்தார். அவரும் காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடி உள்ளார். டாஸ்சிற்க்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் அவர் இன்றைய போட்டியில் விளையாடப் போகிறார் என்பது அவருக்கு தெரியும். இதுபோன்ற சூழலில் இருந்து வந்து விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இது அவரது மைண்ட் செட்டையும் தரத்தையும் காட்டுகிறது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

சற்று முன்