உலக கோப்பை போட்டிகிள் இன்றில் இருந்து துவங்க உள்ளன நிலையில், அணைத்து அணிகளும் அவர்கள் விளையாட வேண்டிய நகரங்களுக்கு சென்று சேர்ந்துள்ளன. இந்த உலக கோப்பை தொடருக்கான முதல் போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் ஆகிய இரண்டிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்று நல்ல ஒரு பார்மில் உள்ளது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, கில் போன்றோர் பார்மில் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று கேப்டன்ஸ் டே நிகழ்ச்சியை பங்குபெற்ற ரோகித் சர்மா, சில விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் அவர், கடந்த மூன்று உலகக்கோப்பை தொடர்களில் எந்த நாடு நடத்துகிறதோ அந்த நாடே உலகக்கோப்பையை வென்றுள்ளது. எனினும் இது ஒரு நெடுந்தொடர் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று இப்போதே நாம் கூற முடியாது.
எங்களை பொறுத்தவரை அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பதே தற்போதைய குறிக்கோளாக உள்ளது. எங்கள் மேல் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் அதை பற்றி நாங்கள் பெரிதாக கவலைகொள்ளவில்லை. ஏன் என்றால் எதிர்பார்ப்பு என்பது எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும்.
அதே போல யாரெல்லாம் விளையாடுகிறார்கள், சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பது குறித்தும் நாங்கள் கவைப்பட போவதில்லை. நாங்கள் ஒரு அணியாக இருந்து ஒரே நோக்கத்துடன் எப்படி செயல்படவேண்டும் என்பதை யோசிக்கும் நேரம் இது.
அணி வீரர்கள் விளையாடும் போது ஒரு விதமான அழுத்தத்தை உணருவதுண்டு. அழுத்தத்தை எல்லாம் ஓரங்கட்டுங்கள் என்று எளிதாக கூறலாம். ஆனால் அழுத்தத்தில் இருந்து விடுபடுவது என்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. எங்களை பொறுத்தவரை நாங்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம்.
ஒரு அணியின் சிறப்பாக தயாராகும் பட்சத்தில் அதற்கான கான்பிடன்ஸ் எப்போதும் அதிக அளவில் இருக்கும். பயிற்சி போட்டிகளில் விளையாட ஆசையாக இருந்தோம் ஆனால் மழை காரணமாக அந்த இரு போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. ஒட்டுமொத்தமாக நாங்கள் இந்த உலக கோப்பைக்கு தயாராகி இருக்கும் விதம் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.