- Advertisement 3-
Homeவிளையாட்டுஇது ஒன்னும் கிளப் கிரிக்கெட் கெடையாது... எனக்கு இதுல நம்பிக்கையே இல்ல... பிளேயேர்ஸ் கிட்ட ஸ்ட்ரிக்டா...

இது ஒன்னும் கிளப் கிரிக்கெட் கெடையாது… எனக்கு இதுல நம்பிக்கையே இல்ல… பிளேயேர்ஸ் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்… ஆ.கோ அணி அறிவிப்பில் ரோகித் அதிரடி பேச்சு..

- Advertisement-

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுகிறார்கள். அதே போல இளம் வீரரான திலக் வர்மா புது வரவாக இந்திய ODI அணிக்கு வந்துள்ளார்.

அணி அறிவிப்பு விழாவில் ரோகித் சர்மா பல்வேறு தகவல்கள் குறித்து பேசினார். அணி வீரர்கள் எந்த வரிசையில் களம் இறங்க போகிறார்கள் என்பது குறித்து அவர் பேசுகையில், யாரும் அணியில், இது தான் எனக்காக சிறந்த இடம் என்று பேச கூடாது. எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் அதில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் மட்டுமே அணிக்கு தேவை.

- Advertisements -

இந்து கிளப் கிரிக்கெட் கிடையாது. இது இன்டர்நேஷனல் கிரிக்கெட். அணியின் தேவை என்னவோ அதை அறிந்து அதற்க்கு ஏற்றாற்போல அந்தந்த இடத்தில் விளையாட வேண்டும். இது தான் உங்கள் இடம் என்று கூறி ஒரு இடத்தில் வீரர்களை லிமிட் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

வீரர்களிடம் இருந்து எவ்வளவு பெற முடியுமோ அதை அணி பெற விரும்புகிறது. அதனால் யாருக்கும் எந்த இடமும் தற்போதுவரை நிலையானது கிடையாது. இதை வீரர்களிடமும் நாங்கள் முன்ப தெரிவித்து விட்டோம் என்று கூறி உள்ளார் ரோகித்.

- Advertisement-

வெற்றி வாய்ப்பு குறித்து அவர் பேசுகையில், உலக அளவில் அந்ததை அணியை பிடித்தவர்கள் அவர்கள் அணி ஜெயிக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அதில் எப்போதும் நம்பிக்கை இல்லை. சொந்த நாட்டில் விளையாடும்போது வெற்றிக்கான வாய்ப்பு சற்று அதிகம் என்று கூறலாம். ஆசிய கோப்பையில் முழுமையான செயல் திறனையும் காட்டவேண்டும்.

உலககோப்பைக்கு முன்பு நடக்கும் தொடர் இது என்பதால் நம்மை நாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் போட்டியாக இது இருக்கும். நாம் இதில் சிறப்பாக விளையாட வேண்டும். அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிடும். நாம் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்