- Advertisement -
Homeவிளையாட்டுஉலககோப்பையில் இந்த 2 தமிழக வீரர்கள் இருக்கலாம்... அவர்களுக்கான கதவு இன்னும் மூடப்படல... ரசிகர்களை குஷியாக்கிய...

உலககோப்பையில் இந்த 2 தமிழக வீரர்கள் இருக்கலாம்… அவர்களுக்கான கதவு இன்னும் மூடப்படல… ரசிகர்களை குஷியாக்கிய ரோகித் ஷர்மா பேச்சு…

- Advertisement-

ரசிகர்களின் பல நாள் காத்திருப்புக்கு பிறகு இன்று ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேக் அப் வீரராக சஞ்சு சாம்சன் இதில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டரும் இடது கை சுழற் பந்து வீச்சாளருமான ரவீந்திர ஜடேஜா இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். அதேபோல் அக்சர் பட்டேலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இப்படி இருக்கையில் வலது கை ஸ்பின்னரான அஸ்வினுக்கோ, வாஷிங்டன் சுந்தருக்கோ இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை போட்டிகள் இந்திய மண்ணில் நடப்பதால் இங்கு உள்ள மைதானங்கள் சுழற் பந்தற்கு தகுதியானவை என்ற சூழலில் சுழற் பந்து வீரர்கள் ஆசிய கோப்பைக்கு செலக்ட் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அஷ்வினோ, வாஷிங்டன் சுந்தரோ தேர்வாகாதது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் அஸ்வினையோ அல்லது வாஷிங்டன் சுந்தரையோ இருவரில் ஒருவரையாவது இந்திய அணியில் ஆசிய கோப்பைக்காக எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களை எடுக்காமல் தேர்வுக்குழு தவறு செய்துவிட்டது போன்ற விமர்சனங்களை முன்வைக்க துவங்கி உள்ளனர்.இந்த நிலையில் அணி அறிவிப்புக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா, இது குறித்த சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அது பற்றி அவர் கூறுகையில்,

- Advertisement-

நாங்கள் அணியில் ஆப் ஸ்பின்னர்களை எடுக்க வேண்டும் என்று சிந்தித்தபோது அஸ்வினையோ அல்லது வாஷிங்டன் சுந்தரையோ அணிக்குள் எடுக்கலாம் என ஆலோசித்தோம். ஆனால் அணிக்கு தற்போது வேகப்பந்து பேச்சாளர்கள் அதிகப்படியாக தேவைப்படுகிறார்கள்.

நாம் 17 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருப்பதால் 17 பேர்களுக்கும் சில சுழற் பந்து வீரர்களை அடக்க முடியவில்லை. நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்த ஏதாவது ஒரு வேகப்பந்து வீச்சாளர்களை வெளீயே நிறுத்தினால் மட்டுமே சுழற் பந்துவீச்சாளர்கள் அணிக்குள் வர இயலும் என்ற ஒரு நிலை இருந்தது.

சாகல் கூட அதனால் தான் அணிக்கு வெளியே உள்ளார். அடுத்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமான பல போட்டிகளில் வேத பந்துவீச்சாளர்களின் பங்கு அணிக்கு அதிகப்படியாக தேவைப்படுகிறது. அதேபோல சுழற்பந்து வீச்சாளர்களுக்கான கதவு மூடப்பட்டு விட்டது என்று யாரும் கருத வேண்டாம். நமக்கு சாகல், அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் தேவை என்றால் உலகக் கோப்பை அணியில் அவர்களை எப்படி சேர்ப்பது என்று நிச்சயம் யோசிப்போம் என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா. இதன் காரணமாக தமிழக ரசிங்கர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சற்று முன்