இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அது அணி வீரர்களுக்கு நிச்சயம் அழுத்தத்தை ஏற்படுத்த கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் வீரர்கள் யாரும் பெரிய அளவில் அழுத்தத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாகவே உள்ளனர் என்றே கூறலாம்.
இரு அணிகளுமே உலகின் தலை சிறந்த அணிகளாக உள்ள நிலையில், இந்த போட்டியான மிக கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் பாக்கிஸ்தான் வென்றுள்ளதால் அவர்களின் தன்னம்பிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் என்று கூறலாம். இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இந்த போட்டிக்கு முன்பு அளித்துள்ள பேட்டியில் பல விடையங்களை பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் அணி குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் ஒரு மிகச்சிறந்த அணியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். டி20 உலக கோப்பை ஆகட்டும் பைலேட்ரல் சீரியஸ் ஆகட்டும் அவர்கள் அதில் எல்லாம் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அவர்கள் ஓடிஐ -இல் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அதற்கு பின் மிகக் கடுமையான உழைப்பு இருக்கிறது. நிச்சயம் இந்த நிலையை அடைய அவர்கள் கடுமையாக உழைத்து இருப்பார்கள். அதே சமயம் அணிக்குள் மிகச் சிறப்பான ஒற்றுமை இருந்திருக்கும் என்று நான் எண்ணுகிறேன். தற்போது அவர்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளார்கள். அதனால் எங்களுடைய பணி மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறி கூறி உள்ளார்.
இந்திய அணி குறித்து அவர் பேசுகையில், எங்கள் அணியை பொறுத்தவரை நாங்கள் மிகச் சிறப்பாக தயாராகி உள்ளோம். குறிப்பிட்ட ஏரியாக்களில் நாங்கள் முன்னேறி இருக்கிறோம். எங்களுடைய திட்டங்களை போட்டியில் நிச்சயம் சரியாக அப்ளை செய்ய முடியும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பாக்கிஸ்தான் பவுலர்களை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது குறித்து ரோகித் பேசுகையில்,
அணியில் இருக்கும் மூன்று பவுலர்களும் மிகச் சிறப்பானவர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணியில் எப்போதுமே சிறப்பான பவுலர்கள் இருந்துள்ளனர். பாகிஸ்தான் அணியின் பவுலர்களின் வலிமை என்ன, அவர்கள் எந்த ஏரியாக்களில் பிந்து வீசுவார்கள் போன்றவற்றை நாங்கள் பார்த்து உள்ளோம். எங்களுடைய அனுபவத்தைக் கொண்டு இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.