- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல்-லே பரவா இல்ல. இங்கு இது கூட பஞ்சமா இருக்கு. ஒரு பைனல் போட்டில இப்படியா...

ஐபிஎல்-லே பரவா இல்ல. இங்கு இது கூட பஞ்சமா இருக்கு. ஒரு பைனல் போட்டில இப்படியா பண்ணுவீங்க. கடுமையாக விமர்சித்த ரோகித் ஷர்மா

- Advertisement-

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா அணியானது கடைசி நாளில் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை என்கிற நிலையில் 7 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்தது. ஆனாலும் ஆஸ்திரேலிய அணியின் அட்டகாசமான பந்துவீச்சின் காரணமாக போட்டி துவங்கிய ஒன்றரை மணி நேரத்தில் உள்ளாகவே 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்காரணமாக இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் ஆட்டமிழந்த விதம் தான் கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிக அளவு பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் சுப்மன் கில் அடித்த பந்து நேராக மூன்றாவது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கேமரூன் கிரீனை நோக்கி சென்றது. அவரும் சரியாக டைவ் அடித்து பந்தை பிடித்தார். ஆனால் கேமரூன் கிரீன் பந்தை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது.

இருந்தாலும் மூன்றாவது அம்பயர் பலமுறை அதனை ரீப்ளே செய்து பார்த்து விட்டு அவுட் என்று அறிவித்தார். இப்படி மூன்றாவது நடுவர் சுப்மன் கில்லை அவுட் என்று அறிவித்ததும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் சுப்மன் கில் ஆட்டமிழக்கவில்லை என்று புகைப்படத்தோடு விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த விக்கெட் குறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா ஐசிசி ஒருங்கிணைப்பாளர்களை சரமாரியாக விளாசும் வகையில் ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த விக்கெட் விடயம் எனக்கு அதிருப்தியாகவே இருக்கிறது. ஏனெனில் மூன்றாவது அம்பயர் இன்னும் சில முறை அந்த பந்து எங்குப்பட்டது என்று ரீப்ளே செய்து பார்த்திருக்க வேண்டும். அவர் ஒரு நான்கு முறை அந்த ரீப்ளேவை பார்த்துவிட்டு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்ததாக அறிவித்தார்.

- Advertisement-

மூன்றாவது அம்பயர் முடிவினை வழங்குவது சரியான ஒன்றுதான் ஆனாலும் அவர் தெளிவான மற்றும் சரியான முடிவினை வழங்க வேண்டும். சுப்மன் கில் கொடுத்த கேட்ச் போன்ற விக்கெட்டுகளுக்கு 100% உறுதியான தெளிவு இருந்தால் மட்டுமே விக்கெட் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு ஆதாரம் இல்லாமல் இப்படி விக்கெட் கொடுத்திருக்கக் கூடாது. அதேபோன்று இன்னும் ஏகப்பட்ட கேமரா ஆங்கிள்களை பார்த்திருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்தியா தோத்ததுக்கு என்ன ஏண்டா இப்படி தாலிக்கறிங்க. நான் நெனச்சது சரி தான். பாக்கிஸ்தான் ரசிகர்கள் செய்த வேலையால் ட்விட்டரில் குமுறிய இர்பான் பதான்

இங்கு இரண்டு கேமரா ஆங்கிள் மட்டுமே காட்டப்பட்டன. ஐபிஎல் தொடரில் கூட எங்களிடம் 10 விதமான கேமரா ஆங்கிள் இருக்கிறது. அதனால் வெவ்வேறு கோணங்களில் பரிசோதிக்க முடியும். ஆனால் உலகத்தரம் வாய்ந்த ஐசிசி தொடரில் இதுபோல் இரண்டே இரண்டு கேமரா ஆங்கிள்களை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய முடிவை எடுப்பது வருத்தம் அளிக்கிறது என ரோகித் சர்மா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்