- Advertisement 3-
Homeவிளையாட்டுநக்கல்யா உனக்கு... சூர்யகுமார் கேட்ச் எடுத்ததை ஜாலியாக கலாய்த்த ரோஹித் ஷர்மா.. அமைச்சருங்களே சிரிச்சுட்டாங்க..

நக்கல்யா உனக்கு… சூர்யகுமார் கேட்ச் எடுத்ததை ஜாலியாக கலாய்த்த ரோஹித் ஷர்மா.. அமைச்சருங்களே சிரிச்சுட்டாங்க..

- Advertisement-

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று ஒரு வாரத்திற்கு மேல் ஆனாலும் இன்னும் அது தொடர்பான கொண்டாட்டங்கள் குறைந்தபாடில்லை. ஒரு பக்கம் இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் கொஞ்ச ரசிகர்கள் அதனை நினைத்து வருந்தி தான் போயினர். ஆனால் அதே வேளையில், இன்னொரு பக்கம் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி அதில் தோற்றதால் பெரிதாக கண்டு கொள்ளாமல் தொடர்ந்து டி20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டங்களில் ரசிகர்கள் மும்முரமாக இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, டி20 உலக கோப்பையை வென்ற பின்னர் இந்தியா வந்தடைந்திருந்த வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வெளி பேருந்தில் பிரம்மாண்ட பேரணி, ரசிகர்கள் அலைகடலென நின்ற கூட்டத்திற்கு மத்தியில் செல்ல அந்த இடமே திருவிழா கோலம் பூண்டிருந்தது.

- Advertisements -

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியுடனும் நேர்காணல் ஒன்றில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் உரையாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து இந்திய வீரர்களும் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல அங்கேயும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு அம்மாநில அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள, சூர்யகுமார் மற்றும் ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் நிறைய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

- Advertisement-

அப்போது சூர்யகுமார் யாதவ் பற்றி கேப்டனாக ரோஹித் ஷர்மா தெரிவித்த கருத்து, அதிக கவனம் பெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியில், சூர்யகுமாரின் கேட்சும் போட்டியின் போக்கை மாற்ற முக்கிய காரணமாக அமைத்திருந்தது. 6 பந்துகளில் 16 ரன்கள் வேண்டுமென்ற சூழலில், மில்லர் அடித்த சிக்ஸ் தான் என அனைவரும் கருத, மிக அற்புதமாக சரியாகி கணித்து கேட்சாக மாற்றி இருந்தார் சூர்யகுமார்.

இது பற்றி நிகழ்ச்சியில் பேசி இருந்த சூர்யகுமார் யாதவ், “அந்த பந்து தான் எனது கைக்குள் அப்படியே வந்து உட்கார்ந்து கொண்டது” என கூறி இருந்தார். இதற்கு பின் பேசி இருந்த ரோஹித் ஷர்மா, “பந்து அதுவாக தனது கைகளில் இருந்து கொண்டதாக சூர்யகுமார் கூறினார். அப்படி நடந்தது ஒரு விதத்தில் நல்லது தான். இல்லையென்றால் அவரை நான் அணியில் இருந்து வெளியே உட்கார வைத்திருப்பேன்” என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கேட்டதும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரிக்கத் தொடங்க, ரசிகர்களும் நக்கலயா உனக்கு என ரோஹித் ஷர்மாவை பற்றி குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்