- Advertisement 3-
Homeவிளையாட்டுரிட்டையர்டு ஹர்ட் ஆகுறதுலயே இப்படி ஒரு சாதனையா.. ரோஹித்திற்கு மட்டுமே உண்டான பெருமை..

ரிட்டையர்டு ஹர்ட் ஆகுறதுலயே இப்படி ஒரு சாதனையா.. ரோஹித்திற்கு மட்டுமே உண்டான பெருமை..

- Advertisement 1-

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் நல்ல ரன் ரேட்டையும் முதல் போட்டியிலேயே தக்க வைத்து கொண்டுள்ளனர். இந்திய அணி இடம் பெற்றுள்ள குரூப் ஏ-வில் அயர்லாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானை தவிர மற்ற மூன்று அணிகளும் இந்திய அணி எளிதாக வீழ்த்தி விடும் என்று தான் டி20 உலக கோப்பை தொடருக்கும் முன்பாக கருதப்பட்டு வந்தது.

அயர்லாந்து அணியை இந்தியா தற்போது வீழ்த்தி இருந்தாலும் இன்னொரு பக்கம் கனடா மற்றும் அமெரிக்கா அணிகளில் நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் அவர்களிடம் இந்திய அணி தடுமாற்றம் காணுமா? அல்லது அயர்லாந்தை வீழ்த்தியது போல சுக்கு நூறாக்கி தொடர் வெற்றிகளை குவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மறுபுறம் உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என வந்துவிட்டாலே, இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் தான் இருந்து வருவார்கள். இதனால் சிறிய அணிகளுக்கு எதிரான போட்டியை விட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நிச்சயம் வென்றே ஆக வேண்டும் என்ற ஒரு இக்கட்டான சூழல்தான்.

இன்னொரு பக்கம் அமெரிக்காவில் உள்ள பிட்ச்களும் பெரிய அளவில் கை கொடுக்காமல் இருக்க இதனை எல்லாம் தாண்டி ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி எப்படி இந்த முறை டி20 உலக கோப்பை வெல்லும் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement 2-

இதனிடையே அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 52 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் ஷர்மா, காயத்தின் காரணமாக பாதியில் விலகி இருந்தார். டாஸின் போதே தனது கை பகுதியில் காயம் இருப்பதை அறிவித்திருந்த ரோஹித் ஷர்மா, அடுத்த போட்டிகளில் நிச்சயம் ஆடுவார் என்று தெரிவித்திருந்தார்.

அப்படி இருக்கையில் சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று முறை தான் இந்திய வீரர் ஒருவர் பாதியில் ரிட்டயர்டு ஹர்ட் அவுட் ஆகியுள்ளார். அந்த மூன்று நிகழ்வுகளுமே ரோஹித் சர்மாவுக்கு நடந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 60 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித், காயம் காரணமாக விலகி இருந்தார். இதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2022 ஆம் ஆண்டிலும் 11 ரன்களில் இருந்த ரோஹித் சர்மா, காயத்தால் விலக மீண்டும் மூன்றாவது முறையாக அயர்லாந்துக்கு எதிராக டி20 போட்டியில் அப்படி ஒரு சம்பவம் ரோஹித்திற்கு தற்போது நடந்துள்ளது.

சற்று முன்