- Advertisement 3-
Homeவிளையாட்டுசொதப்பிய சஞ்சு, துபே.. அத பத்தி கவலைப்படாதீங்க.. இனி தான் இருக்கு ஆட்டமே.. ரோஹித் போட்ட...

சொதப்பிய சஞ்சு, துபே.. அத பத்தி கவலைப்படாதீங்க.. இனி தான் இருக்கு ஆட்டமே.. ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்..

- Advertisement 1-

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் லீக் போட்டிகளிலும் இதனைத் தொடர்ந்து தங்களின் பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையை ரோஹித் அண்ட் கோ இன்னும் பலப்படுத்துவார்கள் என்றே தெரிகிறது. விராட் கோலி இந்த பயிற்சி போட்டியில் இடம்பெறாத நிலையில் ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்தனர்.

சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் அவுட் ஆக, ரோஹித் ஷர்மாவும் பெரிய அளவில் ரன் சேர்க்காமல் 23 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த், 50 ரன்கள் அடிக்க சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளித்திருந்தனர். இதனால் இந்திய அணியும் 182 ரன்கள் சேர்க்க, தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 122 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது.

இதன் பெயரில் இந்திய அணியும் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற பந்துவீச்சு மற்றும் சில அதிரடி வீரர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ரன் சேர்க்கவே இந்த டி20 போட்டியில் தடுமாறியது விமர்சனமாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணியில் தேர்வாகி இருந்தனர்.

ஆனால், அந்த தொடரிலேயே கடைசி கட்ட போட்டிகளில் இவர்கள் சொதப்ப, டி 20 உலக கோப்பையில் ஃபார்முக்கு வந்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ரோஹித் ஷர்மா பேசுகையில், “இந்த போட்டியில் சில விஷயங்கள் சிறப்பாக போனது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த புதிய மைதானம் மற்றும் புதிய பிட்ச் ஆகியவற்றின் சூழ்நிலை அறிந்து கொள்வதும் மிக முக்கியம்.

- Advertisement 2-

ரிஷப் பந்த் மூன்றாவது வீரராக உள்ளே வந்தது அவருக்கு ஒரு வாய்ப்பாக தான் கொடுக்கப்பட்டது. நாங்கள் இன்னும் பேட்டிங் வரிசையை சரியாக உருவாக்கவில்லை. மிடில் ஓவர்களில் நிறைய பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் தன்னுடைய பந்து வீச்சு திறன்களை வெளிப்படுத்தி இருந்தார்.

எங்களிடம் சிறப்பான 15 வீரர்கள் இருக்கின்றனர். அதிலிருந்து பிட்ச்சின் சூழ்நிலைகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்” என ரோஹித் கூறி உள்ளார்.

சற்று முன்