- Advertisement 3-
Homeவிளையாட்டுதொடரும் ஏமாற்றம்.. இளம் நட்சத்திரம் மீது கடுப்பான ரோகித் சர்மா.. நிக்க வச்சி கிளாஸ் எடுக்க...

தொடரும் ஏமாற்றம்.. இளம் நட்சத்திரம் மீது கடுப்பான ரோகித் சர்மா.. நிக்க வச்சி கிளாஸ் எடுக்க காரணம் என்ன?

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது உலகக்கோப்பை தொடரில் எந்த வீரரும் நடு வரிசையில் களம் இறக்கலாம் என்பதற்கான ஆடிசன் நடைபெற்று வருகிறது. கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் முதல் தர வாய்ப்பாக இருந்தாலும் அவர்கள் இருவரும் தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் இஷான் கிஷன் சூரிய குமார் யாதவ், அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் தங்களுடைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை. மேலும் ரிஷப் பண்ட் தற்போது உலகக்கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என்பதால் அடுத்த விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் பணியில் இந்தியா இருக்கிறது.

தற்போது இசான் கிஷனும், சஞ்சு சாம்சனும் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் இசான் கிஷன் தொடக்க வீரராக தான் விளையாடி வருகிறார். அவரை உலகக்கோப்பை தொடரிலோ ஆசிய கோப்பை தொடரிலும் அந்த இடத்தில் களம் இறக்க முடியாது.

அதனால் நடுவரிசையில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சன் தான் அந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார். சஞ்சு சாம்சன் திறமை வாய்ந்த வீரராக அறியப்பட்டாலும், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்தியிருந்தாலும், இது போன்ற முக்கியமான வாய்ப்புகள் கிடைத்தால் அவர் தடுமாறி வருகிறார்.

- Advertisement 2-

கடந்த ஆட்டத்தில் கூட சாம்சன் சொற்பரன்களின் ஆட்டம் இழந்தார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா சஞ்சு சாம்சனை அழைத்து அவருக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். இந்திய அணி தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது? எப்படி நடு வரிசையில் விளையாட வேண்டும் யார் யார் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா சஞ்சு சாம்சனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் எதிரான கடைசி வாய்ப்பையும் சஞ்சு சாம்சன் வீணடித்து விட்டால் இனி அந்த வாய்ப்பு இஷான் கிஷனுக்கு தான் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் இதுபோல் தடுமாறுவதற்கு காரணம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்காமல் பெஞ்சில் உட்கார வைத்து ஏதேனும் ஒரு போட்டியில் வாய்ப்பு வழங்கிவிட்டு உட்கார வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

சற்று முன்