- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் எவ்ளோ சொல்லியும் டிராவிட் கேட்கல.. இந்திய அணியின் தற்போதைய நிலை.. எமோஷனல் ஆன ரோஹித்..

நான் எவ்ளோ சொல்லியும் டிராவிட் கேட்கல.. இந்திய அணியின் தற்போதைய நிலை.. எமோஷனல் ஆன ரோஹித்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி 20 உலக கோப்பை போட்டிகளை தொடங்க உள்ள நிலையில், அதை பற்றி பல்வேறு பரபரப்பான கருத்துக்களும் இருந்து வருகிறது. ஆடும் லெவன், யார் விக்கெட் கீப்பர், சுழற்பந்து வீச்சாளர்கள் யார் யார் என பல விஷயங்கள் தற்போது வரையிலும் கேள்விக்குறியாக இருந்து வரும் சூழலில், இந்த முடிவுகளை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அப்படி இருக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதும் பெரிய கேள்வியாக தான் இருந்து வருகிறது. அதன் படி, ஆரம்பத்தில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டிங் லாங்கர் என வெளிநாட்டு வீரர்கள் பெயர் அடிபட்டு வந்த நிலையில், அவர்களே இதனை மறுத்திருந்தனர். பிசிசிஐயும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகுல் டிராவிட்டை போல ஒரு இந்திய வீரர் தான், மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

இதனால், கவுதம் கம்பீர் தான் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் என சில தகவல்களும் வெளியாகி இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், இந்த சீசனில் அவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்லவும் உதவி இருந்தார்.

அதே வேகத்துடன் இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் செயல்பட்டால் நிச்சயம் பல ஐசிசி கோப்பைகளை வெல்லும் வகையில் உதவி செய்வார் என்பது பரவலான கருத்தாக உள்ளது. இதற்கிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வரும் ராகுல் டிராவிட், ஐசிசி கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்றாலும் பல முக்கியமான தொடர்களில் பலமான அணியாக திகழ காரணமாக இருந்தார்.

- Advertisement 2-

மேலும் டி 20 உலக கோப்பை தொடர் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக தனது கடைசி தொடர் என ராகுல் டிராவிட்டே சமீபத்தில் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில், டிராவிட் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன கருத்துக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

“நான் ராகுல் டிராவிட் தலைமையில் தான் இந்திய அணியில் ஆட தொடங்கினேன். அவர் எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ரோல் மாடல். அவர் அணிக்காக செய்த ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் அனைவரும் ரசித்து வருகிறோம். நான் அவரை தொடர்ந்து பயிற்சியாளராக செயல்படுமாறு சமரசம் செய்து பார்த்தேன். தனிப்பட்ட முறையில் நான் அவருடனான நேரத்தை அதிகம் ரசித்து செலவழித்துள்ளேன்” என ரோஹித் கூறி உள்ளார்.

சற்று முன்