Homeகிரிக்கெட்ஐசிசி-யின் இந்த விதி நியாயமற்றது... இதை மாத்தணும்.. ரோகித் சர்மா முன்வைத்த புதிய விதி... வரவேற்கும்...

ஐசிசி-யின் இந்த விதி நியாயமற்றது… இதை மாத்தணும்.. ரோகித் சர்மா முன்வைத்த புதிய விதி… வரவேற்கும் ரசிகர்கள்

-Advertisement-

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன்னும் 5 நாட்களில் இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடக்கவுள்ளது.

உலகக் கோப்பையில் விளையாட ஏற்கனவே இந்தியா வந்துள்ள மற்ற அணிகள் தற்போது பயிற்சி போட்டியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இந்திய அணியும் தனது பயிற்சியை துவங்கி உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது தீவிரமான வேலைகளுக்கு இடையே சமீபத்தில் பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறிய விடயங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-Advertisement-

பத்திரிக்கையாளர் விமல் குமாரோடு youtube சேனல் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்ட ரோகித் சர்மாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஐ.சி.சியின் ஏதாவது ஒரு ரூல்ஸை மாற்ற வேண்டுமென்றால் எதை மாற்றுவீர்கள் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, பேட்ஸ்மேன்கள் 90 மீட்டருக்கு மேல் சிக்ஸ் அடித்தால் 8 ரன்களும், 100 மீட்டருக்கு  மேல் சிக்ஸ் அடித்தால் 10 ரன்களும் என நிர்ணயித்தால் கிரிக்கெட் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் தற்போது இருக்கும் விதிப்படி எல்லைக்கோட்டை தாண்டினாலே அதற்கு சிக்சர் வழங்கப்படுகிறது.

-Advertisement-

கிறிஸ் கையில் போன்ற மகத்தான வீரர்கள் அசாதாரணமாக 100 மீட்டர் சிக்ஸர்களை அடிப்பார்கள். ஆனால் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே அதற்கு கொடுக்கப்படுகிறது. இது ஒரு நியாயமற்ற முடிவு என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ரோகித் சர்மா இதை விளையாட்டாக கூறினாலும், அவரின் இந்த கருத்து பலராலும் உற்றுநோக்கி பார்க்கப்படுகிறது. அதே சமயம் அவர் கூறுவது சரிதானே என்று பலரும் கூறிவரும் நிலையில், அவரின் இந்த கருத்தை ரோகித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்