இந்திய அணியின் இரண்டு பெரிய தலைகளாக தற்போது வலம் வரும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைத் தொடருடன் அதன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தனர். இவர்கள் இரண்டு பேரும் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வரும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு சில முக்கியமான ஐசிசி தொடர்களும் நடைபெற உள்ளது.
இளம் வீரர்களுக்கு டி20 போட்டிகளுக்கான வாய்ப்பு கொடுத்து விட்டு அவர்கள் தங்களிடத்தை தியாகம் செய்து தற்போது மற்ற இரண்டு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக கவனத்துடன் அணியை தயாராக முடிவு செய்து வருகின்றனர். அதே வேளையில் இன்னொரு பக்கம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச போட்டிகளில் ஆடுவார்கள் என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது.
இதில் விராட் கோலி 35 வயதிலும் ஃபிட்னஸ் உடன் இருக்கும் அதே வேளையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆடுவார் என தெரிகிறது. ஆனால் இன்னொரு பக்கம் 37 வயதாகும் ரோஹித் ஷர்மா, ஒரு வருடத்திலேயே அவரது சர்வதேச பயணத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது ஃபிட்னஸ் அந்த அளவுக்கு பெரிதாக இல்லாத சூழலில், இதன் காரணமாகவே அவர் விரைவில் சர்வதேச போட்டிகளிலும் இருந்து விலகலாம் என கருதப்படுகிறது. இப்படி பல விஷயங்கள் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச பயணம் குறித்து வெளியாகி வரும் நிலையில், அவரது உடலை இன்னும் தயார் செய்யலாம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா, ரோஹித் ஷர்மாவின் ஃபிட்னஸ் குறித்தும் சில கருத்து முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். “சமீபத்தில் ரோஹித் ஷர்மா நீண்ட நேரம் பயிற்சி மேற்கொள்வதை நான் பார்த்தேன். ஏனென்றால், அவர் இன்னும் நீண்ட காலம் தனது கிரிக்கெட் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறார். அதற்கு ஃபிட்னஸ் தான் முக்கியம் என்பது அவருக்கு தெரியும்.
இலங்கை ஒரு நாள் தொடர் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இடையிலான 48 நாட்களை தனது பயிற்சிக்காகவும் ரோஹித் ஷர்மா பயன்படுத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல், அடுத்தடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளுக்காகவும் ரோஹித் ஷர்மா வேகமாக தயாராகி வருகிறார்” என பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.