- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல் போட்டியில் அதிக டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா- லிஸ்ட்ல யாரெல்லாம்...

ஐபிஎல் போட்டியில் அதிக டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா- லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

- Advertisement-

நேற்று மும்பை இந்தியன்ஸ் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 200 பிளஸ் டோட்டலைத் துரத்தி வெற்றி வாகை சூடியது. PCA ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பரபரப்பான வெற்றியைப் பெற்றாலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்னா டக் அவுட் ஆனது, அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தொடர்ந்து இந்த சீசன் முழுவதும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார்.

இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 184 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அவரின் சராசரி 20+. ஸ்ட்ரைக் ரேட் 129 தான். அதிகபட்ச ஸ்கோர் 65 தான். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அவரின் பேட்டிங் திறமை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அவரால் இப்போதெல்லாம் பெரிய இன்னிங்ஸ்கள் விளையாட முடியவில்லை. அவரின் உடல் எடையும் அதிகமாகி தொந்தியும் தொப்பையுமாக காணப்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழ ஆரம்பித்துவிட்டன.

நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலமாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா. ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளார் ரோஹித். இதுவரை 236 போட்டிகள் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மாவுக்கு இது 15 ஆவது டக் அவுட் ஆகும். அவரோடு சேர்ந்து சுனில் நரைன், மந்தீப் சிங், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் 15 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அம்பத்தி ராய்டு 14 முறை டக் அவுட் ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மும்பை அணி தொடர்ந்து 2 முறை 200+ ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்துள்ள நிலையில் அந்த அணியின் கேப்டன் இப்படி ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

சற்று முன்