Homeகிரிக்கெட்என்ன இப்படி சொதப்புறாரு?… பிறந்தநாள் மேட்ச்களில் ரோஹித்தின் மோசமான இன்னிங்ஸ்கள்!

என்ன இப்படி சொதப்புறாரு?… பிறந்தநாள் மேட்ச்களில் ரோஹித்தின் மோசமான இன்னிங்ஸ்கள்!

-Advertisement-

இந்திய அணிக்குக் கேப்டனாக, தற்போது இருக்கும் ரோஹித் சர்மா 10 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். அதில் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஐந்து ஆண்டுகளில் மும்பை அணியை சாம்பியனாக்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணிவசம் உள்ளது.

ரோஹித் சர்மா, தனிப்பட்ட வீரராகவும் ஐபிஎல் தொடராகவும் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார். இதுவரை டெக்கான் சார்ஜஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்காக விளையாடியுள்ள அவர், 6000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். இதுவரை 235 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் 250 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

-Advertisement-

கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மாவின் ஃபார்மும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். அன்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் விளையாடியது.

அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும், ரோஹித் ஷர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்த பிறந்தநாள் போட்டி மட்டுமில்லாமல் இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில் அவரின் பிறந்தநாளன்று விளையாடிய போட்டிகள் அனைத்திலும் ரோஹித் சொதப்பியுள்ளார்.

-Advertisement-

2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய போது 17 ரன்களில் அவுட் ஆகியுள்ளார். 2014 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது 1 ரன்னில் அவுட் ஆகியுள்ளார்.  2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது 2 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

பிறந்த நாள் அன்று நடக்கும் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக விளையாடி, அதை பிறந்தநாள் பரிசாக தங்களுக்கு தாங்களே கொடுத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த அதிர்ஷ்டம் இதுவரை ரோஹித் ஷர்மாவுக்கு வாய்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

-Advertisement-

சற்று முன்