- Advertisement -
Homeவிளையாட்டுகழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாக… பரிதாப நிலையில் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம்!

கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாக… பரிதாப நிலையில் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம்!

- Advertisement-

நேற்று மும்பை இந்தியன்ஸ் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 200 பிளஸ் டோட்டலைத் துரத்தி வெற்றி வாகை சூடியது. PCA ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பரபரப்பான வெற்றியைப் பெற்றாலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்னா டக் அவுட் ஆனது, அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தொடர்ந்து இந்த சீசன் முழுவதும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார்.

நேற்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடும் 200 ஆவது போட்டியாகும். ஆனால் அந்த போட்டியில் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார். இந்த போட்டி மட்டுமில்லாமல் இந்த சீசன் முழுவதுமே அவரின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது.

இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 184 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அவரின் சராசரி 20+. ஸ்ட்ரைக் ரேட் 129 தான். அதிகபட்ச ஸ்கோர் 65 தான். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அவரின் பேட்டிங் திறமை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அவரால் இப்போதெல்லாம் பெரிய இன்னிங்ஸ்கள் விளையாட முடியவில்லை. அவரின் உடல் எடையும் அதிகமாகி தொந்தியும் தொப்பையுமாக காணப்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழ ஆரம்பித்துவிட்டன.

ஐபிஎல் போட்டிகள் மட்டும் இல்லாது சர்வதேச போட்டிகளிலும் அவரின் ஃபார்ம் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. சமீபத்தில் டெஸ்ட் தொடரில் அடித்த சதம் தவிர, சிறப்பான இன்னிங்ஸ்கள் எதையும் அவர் ஆடவில்லை என்பது வருந்தத்தக்கது. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் கேப்டன் பொறுப்பை ஏற்றபின்னர் அவர் அவுட் ஆஃப் ஃபார்முக்கு சென்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

- Advertisement-

விரைவில் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என முக்கிய தொடர்கள் இருக்கும் நிலையில் தொடக்க ஆட்டக்காரரான அவரின் ஃபார்ம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது பெரும் பின்னடைவாகும்.

சற்று முன்