- Advertisement 3-
Homeவிளையாட்டுரிஷப் பந்த், சாம்சன் டீம்ல இருக்கணும்னா இதான் ஒரே வழி.. சூப்பர் ஐடியா கொடுத்த முன்னாள்...

ரிஷப் பந்த், சாம்சன் டீம்ல இருக்கணும்னா இதான் ஒரே வழி.. சூப்பர் ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்..

- Advertisement 1-

அடுத்த ஒரு மாத காலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமான காலமாக இருக்கப் போவதுடன் மட்டுமில்லாமல் கடந்த சில தொடர்களில் தவறவிட்ட ஐசிசி கோப்பையை இந்த முறை எப்படியாவது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் எட்டிப் பிடித்து விட வேண்டும் என்பதுதான் முக்கியமான பார்வையாகவும் உள்ளது.

அதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணியில் நிறைய மாற்றங்களையும் பிசிசிஐ செய்திருந்த நிலையில் இவை அனைத்துமே ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் உள்ளிட்டோரின் திட்டங்களை பொறுத்துதான் மாற்றம் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்ட பலரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிலையில் ஒரு சிலர் இடம்பெறாமல் போனது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியிருந்தது.

ஆனால் தற்போது இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவருமே சற்று அனுபவத்துடன் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் போன்ற பிட்ச் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் வரிசை மிக சிறப்பாக இருக்க இருக்கும் நிலையில், வேகப்பந்து வீச்சில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஃபார்மில் இல்லாமல் இருக்க, நிச்சயம் கடினமாக உழைத்து உலக கோப்பை போட்டிகளில் கை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே வேளையில் ரிஷப் பந்த் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அவர் நிச்சயமாக இடம் பெறுவார் என்றே தெரிகிறது. அப்படி அவர் இடம்பெறும் பட்சத்தில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கான வாய்ப்பு எதிரணியை பொறுத்து அமையும் என்று தான் தெரிகிறது.

- Advertisement 2-

அதே போல ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், சாஹல் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்பு எதிரணியை கொண்டே முடிவு செய்வார்கள் என தெரிகிறது. இப்படி இந்திய அணியில் எப்படி பார்த்தாலும் ஆடும் லெவனை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் பல கிரிக்கெட் பிரபலங்களும் நிறைய ஆலோசனைகளையும் இந்திய அணிக்கு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆர் பி சிங், இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடிப்பது எப்படி என்பது பற்றி கருத்துகளை தெரிவித்துள்ளார்.”ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரண்டு பேருமே ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும். மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சனும், ஐந்தாவது வீரராக ரிஷப் பந்த்தும் பேட்டிங் செய்ய வேண்டும்.

ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கும் போது சஞ்சு சாம்சன் அடுத்த வீரராகவும் இவரை தொடர்ந்து சூர்யகுமாரும் களமிறங்கலாம். இதன் பின்னர் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா 6 வது வீரராக வரும்போது பேட்டிங் லைன் அப் சிறப்பாக இருக்கும்” என கூறியுள்ளார். ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக ஆட வேண்டுமென பலரும் கூற, சஞ்சு சாம்சன் ஆடினால் அவருக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்