- Advertisement 3-
Homeவிளையாட்டுரிங்கு சிங் இடம் பறிபோனதுக்கு அவங்க மட்டும் தான் காரணம், ரோஹித் இல்ல.. உண்மையை சொன்ன...

ரிங்கு சிங் இடம் பறிபோனதுக்கு அவங்க மட்டும் தான் காரணம், ரோஹித் இல்ல.. உண்மையை சொன்ன ஆர்பி சிங்..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது. டி 20 போட்டிகள் என்றாலே அதிரடி பேட்டிங் தேவைப்படும் சூழலில், ஷிவம் துபே, சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் உள்ளிட்ட பலரும் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்றே தெரிகிறது.

தொடக்க பேட்டிங் ஆர்டரிலும் ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி இருப்பது சாதகமாக பார்க்கப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணி தேர்வில் எடுத்த ஒரு சில முடிவுகள் அதிக விமர்சனத்தையும் சந்தித்து வந்தது. பும்ராவை தவிர வேகப்பந்து வீச்சில் நல்ல ஃபார்மில் இருக்கும் யாரும் இடம்பெறவில்லை. இதனால் சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக நடராஜன், சந்தீப் ஷர்மா என ஐபிஎல் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம் கொடுத்திருக்கலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதனிடையே, நல்ல ஃபார்மில் பேட்டிங் அதிரடி காட்டிய ரிங்கு சிங்கிற்கான இடமும் இந்திய அணியில் பறிபோயிருந்தது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், அதற்கு முன்பு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான பினிஷராகவும் இருந்து வந்தார்.

தோனியை போல டி 20 போட்டிகளில் இந்திய அணிக்கு நல்ல ஒரு பினிஷர் கிடைத்து விட்டார் என்றும் பலர் புகழ்ந்து வந்த சூழலில், ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்து வர, பல போட்டிகளில் அவரால் ஆட முடியாமலே போனது. கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் பட்டையை கிளப்ப, ரிங்கு சிங் குறைவான போட்டிகளில் தான் களமிறங்கி இருந்தார்.

- Advertisement 2-

இதனால், டி 20 உலக கோப்பையிலும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாமல் போக, இதனை அறிந்து மனமுடைந்து போனதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில், ரிங்கு சிங் பெயர் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு காரணம் என்ன என்பது பற்றி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“ரிங்கு சிங் நிச்சயமாக இந்திய அணில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இடம்பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமாகவே பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் ரிங்கு சிங் நிறைய போட்டிகளில் பேட்டிங் செய்து இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என நான் நினைக்கிறேன்” என ஆர் பி சிங் கூறியுள்ளார்.

அவர் குறிப்பிட்டது போலவே இம்பாக்ட் பிளேயர் விதியால் ஐபிஎல் தொடரில் நிறைய பாதகமான விஷயங்கள் அரங்கேறி இருந்ததாக ரோஹித் ஷர்மா மற்றும் கோலி உள்ளிட்டோரும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்