ஒரே வெற்றியின் மூலம் பெங்களூரு மற்றும் மும்பை அணிக்கு செக் வைத்த ராஜஸ்தான் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66-ஆவது லீக் போட்டியானது தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பெற்ற வெற்றியின் மூலம் தற்போது அவர்கள் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்கள். மேலும் ராஜஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றி தற்போது பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டியே எஞ்சியுள்ள வேளையில் தற்போது மூன்று அணிகளுமே 14 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கின்றன. ஒருவேளை பெங்களூரு அணி மற்றும் மும்பை அணி ஆகிய இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தால் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: RCBயின் வெற்றிக்கு பிறகு கம்பீரையும், நவீன் உல் ஹக்கையும் வச்சி செய்யும் கோலி ரசிகர்கள்.

எனவே இந்த ஒரே போட்டியின் மூலம் தற்போது அவர்கள் இருவருக்குமே ராஜஸ்தான் அணி செக் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் குஜராத் அணி மட்டுமே பிளே ஆப் வாய்ப்பினை உறுதி செய்துள்ள வேளையில் சென்னை அணி இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்