- Advertisement -
Homeவிளையாட்டுIND vs PAK : மழை காரணமாக தள்ளிப்போன போட்டி... ரிசர்வ் டேவில் என்னவெல்லாம் நடக்கும்.....

IND vs PAK : மழை காரணமாக தள்ளிப்போன போட்டி… ரிசர்வ் டேவில் என்னவெல்லாம் நடக்கும்.. ரூல்ஸ் என்ன சொல்கிறது?

- Advertisement-

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 56 ரன்களுக்கும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் விராட் கோலி – கேஎல் ராகுல் இணைந்து நிதானமாக விளையாடினர்.

ஷதாப் கான் வீசிய 24.1 ஓவரின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது திடீரென கனமழை பெய்த நிலையில், வீரர்கள் பெவிலியன் நோக்கி ஓடினர். இதன்பின் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் மழை நிற்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நடுவர்களும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை மைதானத்தை சோதனை செய்தனர்.

ஆனால் மழை நிற்காத காரணத்தால் 9 மணியளவில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நாளை தொடரும் என்று அறிவித்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கான ரிசர்வ் டேவை ஏசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை தொடரப்படும். ஆனால் ரிசர்வ் டேவுக்கான விதிமுறைகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

ரிசர்வ் டேவுக்கு ஆட்டத்தை கொண்டு செல்வதற்கே சில விதிமுறைகள் உள்ளன. மழை பெய்யும் நாளில், குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாகவாவது ஆட்டத்தை நடத்த வேண்டும். அதற்கு கூட வாய்ப்பில்லை என்றால் தான் ஆட்டத்தை ரிசர்வ் நாளிற்கு கொண்டு செல்ல முடியும். அதேபோல் ரிசர்வ் நாளில் ஆட்டம் மீண்டும் முதல் பந்தில் இருந்து தொடங்காது.

- Advertisement-

எந்த இடத்தில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து தான் ஆட்டம் தொடங்கும். அந்த வகையில் நாளை இந்திய அணி 24.1 ஓவரில் இருந்து தான் ஆட்டத்தை தொடரும். எந்த பந்துவீச்சாளர் அந்த ஓவரை வீசினாரோ, அதே பந்துவீச்சாளர் தான் பாகிஸ்தான் தரப்பில் பந்துவீச வேண்டும்.

முன்னதாக ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்ட நிலையில், விதி விலக்காக இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்