எல்லாருக்கும் நாலு ஸ்டார். ஆனா ருத்துராஜ் ஜெர்சியில மட்டும் 5 ஸ்டார். எப்படி வந்தது? இவர் நம்மளவிட தீவிரமான சிஎஸ்கே ரசிகரா இருக்காரே என கூறும் பேன்ஸ்

- Advertisement -

ஐபிஎல் விளையாடும் அணிகளில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அணிகளில் தலையாயது சிஎஸ்கே. அந்த அணிக்கு சென்னை தாண்டியும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டென்றால் அதற்குக் காரணம் சென்னை அணியின் கேப்டன் தோனிதான்.

இதுவரை அவர் தலைமையில் 14 சீசன்கள் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி இந்த முறை கோப்பையை வென்றதோடு சேர்த்து 5 முறை கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் சாதனையை சமன் செய்துள்ளது. அந்த அணியின் ஐகானாக தோனி இருந்து வருகிறார்.

- Advertisement -

தற்போது 41 வயதாகும் தோனி ஐபிஎல் விளையாடும் வீரர்களில் மிகவும் வயதான வீரரும் கேப்டனும் ஆவார். அவர் இந்த சீசனோடு ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால கழுவுற மீனில் நழுவுற மீனாக தோனி ஓய்வு பற்றி மழுப்பலாகவே பதில் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கோப்பையை வென்றதும் வழக்கம் போல அமைதியாக இல்லாமல் தோனி கண்ணீரில் மிதந்து மிகவும் எமோஷனலாக காணப்பட்டார். அடுத்த ஆண்டு விளையாண்டாலும் அவருக்கு இந்த ஆண்டு ரசிகர்கள் கொடுத்தது போன்ற வரவேற்புக் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

- Advertisement -

தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பல பெயர்கள் லிஸ்ட்டில் இருந்தாலும் ருத்துராஜ் கெய்க்வாட் பொருத்தமானவர் என்று தோன்றுகிறது. ஏனென்றால் வயது குறைவாக உள்ள அவர் நீண்ட காலம் தோனி போல அணியை வழிநடத்தும் செல்லும் வாய்ப்புள்ளது.

அதற்கேற்ற திறமையும் நிதானமும் அவரிடம் இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில் கோப்பையை வென்றதும் ருத்துராஜ் செய்த செயல் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சென்னை அணி நான்கு முறை கோப்பை வென்றிருந்ததை குறிக்கும் விதமாக அணி வீரர்களின் டிஷர்ட்டில் நான்கு ஸ்டார்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இறுதி போட்டி முடிந்ததும் ருத்துராஜ் தன்னுடைய ஜெர்ஸியில் தானே ஐந்தாவது ஸ்டாரை வரைந்துகொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மேலும் ஐந்து ஸ்டாரோடு தோனியோடு அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை கண்ட ரசிங்கர்கள், இவர் என்ன இவ்வளவு வேகமாக இருக்கிறார். வெறித்தனமான சிஎஸ்கே ரசிகராக உள்ளாரே என பெருமையாக கூறிவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்